Home Minsiter Amit shah : ”2029ல் போதையில்லா இந்தியா” : நக்சல் ஒழிப்பு போன சாதிப்போம் என அமித் ஷா திட்டவட்டம்!

உள்துறை அமைச்சர் இந்தியா மிகப்பெரிய வளர்ந்த நாடாகவும் மாறும் எனவும் தெரிவித்தார்...
Home minister amit shah says india will become Drug free country in 2029
Home minister amit shah says india will become Drug free country in 2029 Google
1 min read

கோவா-வில் மத்திய உள்துறை அமைச்சர் :

வரும் 2029-ம் ஆண்​டில் போதையில்லாத இந்தியா உருவாகும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்​துள்​ளார்.

கோவா​வின் பனாஜி நகரில் அவர் நேற்று நிருபர்​களிடம் கூறியதாவது: வரும் 2047-ம் ஆண்​டில் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உரு​வாக்க பிரதமர் நரேந்​திர மோடி இலக்கு நிர்ணயித்​துள்​ளார்.

இதற்கு போதை​யில்​லாத இந்​தியா உருவாவது அவசி​ய​மாகும்.

பிரதமர் மோடியின் ஆட்சியில் நக்சல்கள் ஒழிப்பு :

பிரதமர் நரேந்​திர மோடி​யின் வழி​காட்​டு​தல்​களால் நாடு முழுவதும் நக்​சல் தீவிர​வாதத்தை வெற்​றிகர​மாக ஒழித்துள்ளோம்.

குறிப்​பாக காஷ்மீரில் தீவிர​வாதம் ஒடுக்​கப்​பட்டு உள்​ளது. வடகிழக்கு மாநிலங்​களில் இடது​சாரி தீவிர​வாதம் ஒழிக்கப்​பட்டு உள்​ளது.

பல்​வேறு மாநிலங்​களில் நக்​சல், மாவோயிஸ்ட் தீவிர​வாதம் ஒழிக்​கப்​பட்டு இருக்​கிறது.

திருப்​பதி முதல் பசுபதி வரையி​லான மாவோ​யிஸ்ட் வழித்தடத்தில் ஏராள​மான தீவிர​வா​தி​கள் ஆயுதங்​களை கைவிட்டு பாது​காப்பு படைகளிடம் சரண் அடைந்து உள்​ளனர்.

நக்சல் தீவிர​வாதத்தை ஒழித்​தது போன்று நாடு முழு​வதும் போதைப் பொருள் பயன்​பாட்​டை​யும் ஒழிப்​போம்.

அடுத்த 3 ஆண்டு​களில், அதாவது வரும் 2029-ம் ஆண்​டில் போதை​யில்​லாத இந்​தியா உரு​வாகும்.

மத்திய அரசின் நடவடிக்கைகள் :

இதற்கு மத்​திய அரசு பல்​வேறு திட்​டங்​களை வகுத்து உள்​ளது. இந்​தி​யா​வின் பல்​வேறு மாநிலங்​கள் சார்ந்த போதைப் பொருட்​கள் கடத்​தலில் 100 சர்​வ​தேச குழுக்​கள் ஈடு​பட்டு உள்​ளன.

அந்த சட்​ட​விரோத குழுக்​கள் அனைத்​தும் ஒழிக்​கப்​படும்.

போதைப் பொருள் கடத்​தல் தொடர்​பான வழக்​கு​களில் தொடர்​புடைய 100 குற்​ற​வாளி​கள் வெளி​நாடு​களில் பதுங்கி உள்​ளனர்.

அவர்​கள் அனை​வரும் இந்​தி​யா​வுக்கு கொண்டு வரப்​பட்டு நீதி​யின் முன்பு நிறுத்​தப்​படு​வார்​கள்.

கடந்த 2014-ம் ஆண்​டுக்கு முன்​பாக போதைப் பொருள் கடத்​தலுக்கு எதி​ராக சிறிய அளவில் மட்​டுமே நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்​டன.

புதிய படைப்பிரிவுகள் உருவாக்கம் :

மத்​தி​யில் பாஜக அரசு பொறுப்​பேற்ற பிறகு போதைப் பொருள் கடத்​தலுக்கு எதி​ராக மிகப்​பெரிய நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்டு வரு​கின்​றன.

ஏஎன்​டிஎப் என்ற பெயரில் புதிய படைப்​பிரிவு உரு​வாக்​கப்​பட்டு உள்​ளது. இந்த படைப்​பிரிவு அனைத்து மாநிலங்​கள், யூனியன் பிரதேசங்​களி​லும் செயல்​படு​கிறது.


மேலும் கூடுதல் அதிகாரிகள் நியமனம் :

மேலும் தேசிய போதைப் பொருள் தடுப்பு அமைப்பு (என்​சிபி) வலுப்​படுத்​தப்​பட்டு வரு​கிறது.

குறிப்​பாக இந்த அமைப்​பில் அதி​காரி​கள், அலு​வலர்​களின் எண்​ணிக்கை கணிச​மாக அதி​கரிக்​கப்​பட்டு உள்​ளது.

மத்​திய, மாநில பாது​காப்பு படைகளைச் சேர்ந்த 1,400-க்​கும் மேற்​பட்ட அதி​காரி​கள், சர்​வ​தேச போலீஸ் அமைப்​பான இன்​டர்​போலுடன் இணைந்து செயல்​பட்டு வரு​கின்​றனர்.

இதன் மூலம் போதைப்​பொருள் தடுப்பு நடவடிக்​கைகள் தீவிரப்​படுத்​தப்​படும். போதைப் பழக்​கத்​தில் சிக்​கித் தவிக்​கும் இளைஞர்களை மீட்க சிகிச்சை மற்​றும் ஆலோ​சனை​கள்​ வழங்கப்​பட்​டு வரு​கின்​றன, இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்.

=================

logo
Thamizh Alai
www.thamizhalai.in