தொடங்கிய டி20 உலககோப்பை : குஷியில் ரசிகர்கள்!

ICC Men's T20 World Cup 2026 begins : உலக கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து ஆவலோடு காத்திருந்த டி20 உலககோப்பை போட்டி கோலகலமாக தொடங்கியது.
ICC Men's T20 World Cup 2026 begins fans are thrilled!
ICC Men's T20 World Cup 2026 begins fans are thrilled!Source : ICC Men's T20 World Cup 2026
1 min read

கிரிக்கெட் பிரியர்களில் டி20 ஆர்வம்

ICC Men's T20 World Cup 2026 begins : பொதுவாக மனிதர்கள் விளையாடும் விளையாட்டுக்களில் அதிகம் முக்கியத்துவம் கொண்டு, அதிக நபர்கள் ஈடுபாடோடு விளைாயடும், விளையாட்டு என்றால் அது கிரிக்கெட் தான்.

உலகம் முழுவதும் கிரிக்கெட்

அதன்படி, கிரிக்கெட் பிரியர்கள் உலகம் முழுவதும் இருக்கின்றனர், என்றால் மிகையாகது. இந்நிலையில், உலக முழுவதும் கிரிக்கெட் முன்னணிி விளையாட்டாகவும், அதிக ரசிகர்கள் கொண்ட விளையாட்டாகவும் பார்க்கப்படுகிறது.

அதனால், கிரிக்கெட் விளையாட்டின் மோகம் அதிகரித்து , தொடர்ந்து இளம் தலைமுறையினரும் அதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன்படி, கிரிக்கெட் விளையாட்டில் பல தரப்பு போட்டிகள் நாடுகளுக்கு இடையில் நடத்தப்படும்.

கிரிக்கெட் விளையாட்டுகள்

அதற்கு ஐபிஎல், ஓடிஐ , டி20 என பல பிரிவுகள் இருக்கும். அதன்படி, 20 ஓவர் போட்டிக்கு ரசிகர்கள் அதிகம் எனலாம்.

தொடங்கும் டி20 உலக கோப்பை

இந்நிலையில், உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது.

பத்தாவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் இன்று தொடங்கி, மார்ச் 8 வரை நடைபெறும். முதல் நாளில் 3 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. காலை 11 மணிக்கு கொழும்புவில் தொடங்கிய முதல் ஆட்டத்தில், முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான், நெதர்லாந்தை எதிர்கொண்டது.

2009 மற்றும் 2014-ல் இங்கிலாந்தையும், 2022-ல் தென்னாப்பிரிக்காவையும் வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்த நெதர்லாந்து இந்த முறை தன்னை முன்னிலைப்படுத்துமாக என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்த நிலையில், அதற்கு பாகிஸ்தான் பதிலடி கொடுத்துள்ளது.

பிற்பகல் 3 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெறும் இரண்டாவது ஆட்டத்தில், சிக்ஸர் மன்னர்களைக் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி, ஸ்காட்லாந்தை சந்திக்கிறது. கடந்த 2022 உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வெளியேற்றிய ஸ்காட்லாந்து, இன்றும் அதே அதிரடியைத் தொடரக் காத்திருக்கிறது.

இரவு 7 மணிக்கு மோதும் இந்தியா -யூஎஸ்ஏ

இதைத்தொடர்ந்து, இரண்டு முறை டி20 உலககோப்பையை வென்ற இந்திய அணியும், யூஎஸ்ஏ அணியும் இரவு 7 மணிக்கு மோத உள்ளனர்.

மாபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கவிருக்கும் இந்த ஆட்டத்திற்கு, இந்திய ரசிகர்களும் யூஎஸ்ஏ ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in