

சர்வதேச யோகா தினத்தையொட்டி, இந்திய இராணுவம் உலகின் மிக உயரமான ராணுவதளமான லடாக் சியாச்சின் களப்பரப்பில் சிறப்பான யோகா நிகழ்வை நடத்தியது.
இதில் சிப்பாய்கள், முன்னாள் வீரர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் குழந்தைகள்ஆர்வமுடன் பங்கேற்றனர்.
இது குறித்து இந்திய ராணுவம் தனது எக்ஸ் தளத்தில் , ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்” என்ற கருப்பொருளுடன் 11வது சர்வதேச யோகா தினத்தில், இந்திய ராணுவம், உலகின் உயரமான போர் மேடையான சியாச்சினிலிருந்து யோகா நிகழ்வுகளை நடத்தியது. இதில் பங்கேற்ற சிப்பாய்கள், முன்னாள் வீரர்கள், குடும்பத்தினர், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ‘யோகாவை ஒரு வாழ்க்கை முறை’ என்று ஏற்றனர் என பதிவிட்டுள்ளது.