இந்தியாவுக்கு சொந்தமாக விண்வெளி நிலையம் : ISRO தலைவர் நாராயணன்

ISRO Will Launch US Communication Satellite using LVM3 Rocket : அமெரிக்க செயற்கைக்கோளை, வணிக ரீதியில் அடுத்த மாதம் இஸ்ரோ விண்ணில் செலுத்த உள்ளதாக இஸ்ரோ அமைப்பின் தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
ISRO Chief V Narayanan Says ISRO Will Launch US Communication Satellite using LVM3 rocket on Commercial Basis Next Month 2025
ISRO Chief V Narayanan Says ISRO Will Launch US Communication Satellite using LVM3 rocket on Commercial Basis Next Month 2025ISRO
1 min read

இஸ்ரோவும் வளர்ந்துள்ளது

ISRO Will Launch US Communication Satellite using LVM3 Rocket : அமெரிக்க செயற்கைகோளை விண்ணில் செலுத்துவது குறித்து இஸ்ரோ தலைவர் நாராயணன் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், 2040ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடுகளின் விண்வெளி திட்டங்களுக்கு இணையாக இஸ்ரோவின் விண்வெளித் திட்டங்களும் இருக்கும்.

வணிக ரீதியாக செயல்படுத்தவே திட்டம்

அமெரிக்காவின் தகவல் தொடர்பு செயற்கைக்க்கோள் ஒன்றை இஸ்ரோ விண்ணில் செலுத்த உள்ளது. தேதி இன்னும் முடிவாகவில்லை. அநேகமாக அடுத்தமாதமாக இருக்கும்.

அது தொலைத்தொடர்பு செயற்கைக்கோள். எல்விஎம்3( Launch Vehicle Mark III) மூலம் அந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இது கூட்டுத்திட்டம் கிடையது. வணிக ரீதியில் செயல்படுத்த உள்ளோம்.

சந்திராயன் 5 திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது

தற்போது விண்ணில் 57 செயற்கைக்கோள்கள் உள்ளன. அடுத்த 3 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 3 மடங்காக அதிகரிக்கும். இந்திய வீரர்களை, விண்வெளிக்கு பத்திரமாக அனுப்பி, மீண்டும் அழைத்து வரும் ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ கவனம் செலுத்துகிறது.

புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் திட்டங்களிலும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சந்திரயான்- 4 மற்றும் 5 ஆகிய திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சந்திரயான் -4 திட்டம் 2028 ல் செயல்படுத்தப்படும். ஜப்பானின் விண்வெளி மையத்துடன் இணைந்து சந்திரயான் -5 செயல்படுத்தப்பட உள்ளது.

இந்தியாவுக்கு சொந்தமாக விண்வெளி நிலையம்

புவி கண்காணிப்பு மற்றும் தகவல் தொடர்பு மற்றும் நேவிகேஷன் ஆகியவற்றில் செயற்கைக்கோளுக்கான தேவை அதிகமாக உள்ளது என்றும் அதனை நோக்கி நாம் பணியாற்றி வருகிறோம். இந்தியாவுக்கு என சொந்தமாக விண்வெளி நிலையம் கட்டவும் பணியாற்றுகிறோம். இவ்வாறு இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறினார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in