2040 ல் நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் முடியும் : நாராயணன்!

ISRO Chief V Narayanan on Gaganyaan 2040: நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை, வரும் 2040ல் இந்தியா செய்து முடிக்கும், என இஸ்ரோவின் தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
ISRO Chief V Narayanan Says Landing Indians on Moon by 2040 Maiden Human Spaceflight Mission Gaganyaan Launch in 2027
ISRO Chief V Narayanan Says Landing Indians on Moon by 2040 Maiden Human Spaceflight Mission Gaganyaan Launch in 2027ISRO
1 min read

நாராயணன் செய்திளார்கள் சந்திப்பு

ISRO Chief V Narayanan on Gaganyaan 2040 : பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் நாராயணன், நம் நாட்டில் விண்வெளி துறையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல, பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். அதன்படி, அடுத்த மூன்று ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையில் ராக்கெட்டுகள் ஏவப்படும். 2040ல் நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை நம் நாடு செய்து முடிக்கும் என்று கூறினார்.

மூன்றாவது ஏவுதளம் அமைப்பதற்கான பணிகள் துவக்கம்

மேலும், 40 மாடி உயர அளவு ராக்கெட், அதில், 80,000 கிலோ எடை உடைய செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. கம்ப்யூட்டர் பயன்பாட்டுக்கு வந்த போது, அதற்கு முதலில் எதிர்ப்பு கிளம்பியது. தற்போது, கம்ப்யூட்டர் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. அதுபோல, ஏ.ஐ.,க்கும் எதிர்ப்புகள் உள்ளன. ஆனால், ஏ.ஐ., நாட்டின் வளர்ச்சிக்கு தேவை. அதிக ராக்கெட்டுகள் ஏவுவதற்கு அதிக ஏவுதளங்கள் தேவை. ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாவது ஏவுதளம் அமைப்பதற்கான பணிகள் துவங்கியுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

பத்தில் ஒரு பங்கு செலவு செய்து செயற்கைகோள் தயாரித்து ஏவுகின்றோம்

அடுத்த ஆண்டு டிசம்பருக்குள், குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறிய அவர், ஆப்பரேஷன் சிந்துாரின் வெற்றிக்கு, நம் நாட்டின் செயற்கைக்கோள்களும் முக்கிய பங்காற்றின. நிலவின் தென்துருவத்தில் செயற்கைக்கோளை தரையிறக்கிய முதல் நாடு இந்தியா தான். வல்லரசு நாடுகளை விட, 50 ஆண்டுகள் கழித்து விண்வெளி ஆராய்ச்சியை துவக்கினோம்.

ஆனால், இன்று விண்வெளி துறையில் பல வல்லரசு நாடுகளுடன் போட்டியிடுகிறோம். அமெரிக்காவில் செயற்கைக்கோள் தயாரிக்க ஆகும் செலவில், பத்தில் ஒரு மடங்கை மட்டுமே செலவிட்டு, செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் ஏவி வருகிறோம். எல்.எம்.வி., - 3 ராக்கெட் திட்டம் அசுர வெற்றி அடைந்துள்ளது. இந்த ராக்கெட் மூலம், 'ககன்யான் - 3'ஐயும் செலுத்த தயார் செய்து உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in