
இஸ்ரோவில் வேலைவாய்ப்பு
ISRO Recruitment 2025 Notification : இஸ்ரோவில் வேலைவாய்ப்பு குறித்து அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டெக்னிக்கல் அஸிஸ்டண்ட் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிப்ளமோ, 10 ஆம் வகுப்புடன் ஐடிஐ முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.1.42 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் வேலைகுறித்த சம்பளம் ஆகியவற்றை பார்க்கலாம்.
எந்தத் துறையில் வேலை
இஸ்ரோ என்று அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிலையத்தின் தலைமையகம் பெங்களூரில் உள்ளது. தமிழ்நாடு உட்பட பல்வேறு இடங்களில் இஸ்ரோவின் துணை நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. விண்வெளி ஆய்வில் வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்திய விண்வெளி ஆய்வு நிலையம் தொடர்ந்த தன்னை முன் நிறுத்தி வருகிறது.
காலி பணியிடங்கள்(ISRO Job Vacancy 2025) :
* Technical Assistant (தொழில்நுட்ப உதவியாளர்)
* சிவில் - 02
* மெக்கானிக்கல் - 02
* மின்சாரம் - 02
* கணினி அறிவியல்/ஐடி - 03
* மின்னணுவியல் - 01
* ஃபிட்டர் - 01
* டர்னர்- 02
* மெஷினிஸ்ட் - 01
* எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் - 02
* எலக்ட்ரீஷியன் - 02
* பிளம்பர் - 01
* மெக்கானிக் குளிர்பதன மற்றும் ஏர் கண்டிஷனிங் - 01 என மொத்தம் 20 காலிப்பணியிடங்கள் உள்ளன. அகமதாபாத்தில் பணியிடம் ஒதுக்கப்படும் என்று இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் மற்றும் தகுதி
சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ்/ ஐடி, எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பணியிடங்களுக்கு துறை சார்ந்த பிரிவில் டிப்ளமோ முடித்து இருக்க வேண்டும். முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். இதர காலிப் பணியிடங்களுக்கு எஸ்.எஸ்.எல்.சியுடன் ஐடிஐ முடித்து(ISRO Recruitment 2025 ITI) இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
வயது வரம்பு
31.10.2025 தேதிப்படி வயது வரம்பு கணக்கிடப்படும். 18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளை பின்பற்றி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
* SC/ST விண்ணப்பதாரர்களுக்கு: +5 ஆண்டுகள்
* OBC விண்ணப்பதாரர்களுக்கு: +3 ஆண்டுகள்
* PwBD (பொது/ EWS) விண்ணப்பதாரர்களுக்கு: +10 ஆண்டுகள்
* PwBD (SC/ST) விண்ணப்பதாரர்களுக்கு: +15 ஆண்டுகள்
* PwBD (OBC) விண்ணப்பதாரர்களுக்கு: +13 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.1.42,000 லட்சம் வரை சம்பளம்
தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மத்திய அரசின் ஊதிய கமிஷன் 7-வது படி ரூ.44,900 - ரூ.1,42,400 சம்பளமாக வழங்கப்படும். தேர்வு முறையை பொறுத்தவரை எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்நிலையில், தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை ஒருமுறை நன்கு படித்து உறுதி செய்து கொண்ட பிறகு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். தேர்வு எழுதிய பிறகு ரூ.500 திருப்பி அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்கலாம். எஸ்சி/எஸ்டி, பெண்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு தேர்வுக் கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்கும் வழிகாட்டிகள்
*விண்ணப்ப இணைப்பு: https://www.prl.res.in/* தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.prl.res.in/OPAR/assets/pdfs/0225.pdf* விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.10.2025, இரவு 11:59 மணி.