இஸ்ரோ தொடர் முயற்சி
ISRO to Launch PSLV-C62 Mission : அண்டைய நாடுகள் விண்வெளி ஆராய்ச்சியில் பெரும் முயற்சியை இட்டு தன்னை முன்னிலை படுத்தி வருகிறது. இதற்கிடையில், இஸ்ரோவின் கடந்த காலம் முதல் தற்போதைய வளர்ச்சி வரை உற்று நோக்கினால், மற்ற நாடுகளை காட்டிலும் முதன்மையே இந்தியாவின் வளர்ச்சி எனலாம்.
விண்வெளியில் சாதிக்கும் இந்தியா
இதற்கு இஸ்ரோவின் அபரிவிகித முயற்சியும், கடின உழைப்புமே முதல் காரணம் என்று கூறலாம். இந்திய முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம், காலம் முதல் இன்று வரை இந்தியா, விண்வெளி தரவுகளில் பெரும் சாதனைகளை தொடர்ந்து நிகழ்த்தி வருகிறது.
சமீபத்தில் இஸ்ரோவின் முயற்சிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். மேலும், இஸ்ரோ தலைவர் நாராயணன், வரும் 2027 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சிகளும், விண்வெளி தரவுகளிலும் இந்தியா முன்னிலை வகிக்கும் என்று உறுதியளித்துள்ளார்
விண்ணில் ஏவப்பட இருக்கும்
இந்த நிலையில், தற்போது இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் விவசாயம், நகர்ப்புற திட்டமிடல்,சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு உள்ளிட்ட பயன்பாடுகளுக்கு செயற்கை கோள்கள் பேருதவியாக உள்ளன.
அன்விஷா செயற்கைக்கோள்
இதற்கென தயார் செய்யப்பட்டுள்ள அன்விஷா செயற்கைக்கோள், பிஎஸ்எல்வி சி62 ராக்கெட் மூலம் வரும் 12ம் தேதி காலை 10:17 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.
ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து இந்த ராக்கெட் ஏவப்படுகிறது.
அன்விஷா செயற்கை கோளுடன் ஒரு ஐரோப்பிய செயற்கைக்கோள் மற்றும் பெங்களூரு, ஹைதராபாத், மொரீஷியஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளால் உருவாக்கப்பட்ட 18 சிறிய செயற்கைக்கோள்களும் சுற்றுவட்ட பாதையில் செலுத்தப்பட உள்ளன என்று இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.