கேரள சட்டமன்ற தேர்தல் .தேர்தல் அறிக்கை வெளியிட்டார் பினராயி விஜயன்!

வருகிற சட்டமன்ற தேர்தலுக்கான அறிக்கையை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், இடது ஜனநாயக முன்னணியான (LDF) தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது
Kerala Assembly Elections .Pinarayi Vijayan releases election manifesto
Kerala Assembly Elections .Pinarayi Vijayan releases election manifestogoogle
1 min read

விறுவிறுப்பான தேர்தல்

சட்டமன்ற தேர்தல் கேரளாவிற்கு வருகிற 9 ம் தேதி நடக்கவிருக்கும் நிலையில் ,தீவிர பிரச்சார செயல்பாடுகளில் கேரளா முனைப்பு காட்டி வருகிறது ,அதன்படி இடது ஜனநாயக முன்னணியான LDF தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது

5 லட்சம் மக்களை ஏழ்மையிலிருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்

அதன்படி தான் குறிப்பிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் முழுமையான வறுமையை ஒழிப்பதற்கான புதுப்பிக்கப்பட்ட உறுதிப்பாட்டுடன், 5 லட்சம் குடும்பங்களை கண்டறிந்து அவர்களை ஏழ்மையிலிருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்

ஓய்வூதியம் ரூ. 3,000 ஆக உயர்த்படும்

இதுவரை வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியத்தை மாதம் ரூ. 3,000 ஆக உயர்தி தரப்படும் என தேர்தல் வாக்குறுதியின் முக்கிய வாக்குறுதியாக இது அறிவிக்கப்பட்டுள்ளது

விளிம்புநிலை சமூகங்கள் மீது கவனம் செலுத்தப்படும்

பட்டியல் சாதியினர், மீனவர்கள் மற்றும் அந்த்யோதயா பயனாளிகள் உள்ளிட்ட விளிம்புநிலை சமூகங்கங்களை மேம்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கை முறைகளும் மேற்கொள்ளப்படும் என்றும்

மேம்படுத்தப்பட்ட சுகாதாரம் வழங்கப்படும்

அதன்படி முதியவர்கள் மற்றும் படுக்கையில் இருப்பவர்களுக்கான மேம்படுத்தப்பட்ட பராமரிப்பு அமைப்புகளையும், உள்ளூர் வட்டத்திலேயே மேம்படுத்தப்பட்ட சுகாதார சேவைகளையும் வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளது

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு அமைத்து தரப்படும்

குறிப்பாக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரப்படும் என ldf கூறியுள்ளது .மாணவர்களுக்கு வளாக வேலைவாய்ப்புகளை எளிதாக்குவதாகவும், திறன் மேம்பாட்டுத் திட்டங்களை விரிவுபடுத்துவதாகவும் தெரிவித்துள்ளது .

பணியிடங்களில் பெண்களுக்கு முன்னுரிமை

பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு முன்னுரிமை பங்களிப்பு அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது .அதனை 5 சதவீதமாக உயர்த்துவதை முக்கிய இலக்காக கொண்டிருப்பதாகவும் அறிவித்துள்ளது

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in