வெறுப்பைத் தூண்டும் 'தி கேரளா ஸ்டோரி 2' ட்ரெய்லர் : முதல்வர் பினராயி விஜயன் எதிர்ப்பு

The Kerala Story 2 Trailer : சமீபத்தில் வெளிவந்த தி கேரளா ஸ்டோரி 2' ட்ரெய்லரில் வெறுப்பை தூண்டும் வகையிலான காட்சி இடம் பெற்று இருப்பதற்கு, முதல்வர் பினாரயி விஜயன் கண்டித்து பதிவிட்டுள்ளார்.
Kerala Chief Minister Pinarayi Vijayan reaction posts on The Kerala Story 2' trailer inciting hatred
Kerala Chief Minister Pinarayi Vijayan reaction posts on The Kerala Story 2' trailer inciting hatredSource : Google
1 min read

பெரும் விவாதத்திற்குள்ளான தி கேரளா ஸ்டோரி பாகம் 1

Kerala CM Pinarayi Vijayan on The Kerala Story 2 Trailer : சுதீப்தோ சென் இயக்கத்தில் 2023இல் வெளியான இந்திப் படம் `The Kerala Story'. மாற்று மதத்தினரை, முஸ்லீம்களாக மாற்றுகின்றனர் என்ற பொது கருத்தை முன்மொழிந்து எடுக்கப்பட்டு திரைக்கு வந்த இப்படம் மிகப்பெரிய விவாத பேச்சாக மாறி பெரும் கண்டங்களுக்கு ஆளானது.

பாகம் 2

.தற்போது இத்திரைப்படத்தின் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியான நிலையில் ,அதிலும் வெறுப்பை தூண்டும் காட்சிகளாக. மேலும் இஸ்லாமிய பெண்கள் சேர்ந்து ஓர் இந்துப் பெண்ணின் வாயில் மாட்டிறைச்சியைத் திணிப்பது போலவும் காட்சி இடம்பெற்றிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் பதிவு

இந்த திரைப்பட சர்ச்சையை அடுத்து கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் வெறுப்பைத் தூண்டும் 'தி கேரளா ஸ்டோரி' படத்தின் இரண்டாம் பாகம் வெளியீடு குறித்த தகவல்களை மிகுந்த கவனத்துடன் நாம் பார்க்க வேண்டும்.

பக்கத்திலேயே அப்பட்டமான பொய்களை பார்த்தோம். நமது மதச்சார்பற்ற கட்டமைப்பை சித்தரிக்கும் எதுவாக இருந்தாலும் அதை கேரளா அரசு நிராகரிக்கும் என்று பதிவிட்டிருந்தார்.

உண்மை எப்போதும் வெல்லும்_பினராயி விஜயன்

வகுப்புவாத மோதலைத் தூண்டும் நோக்கில் புனையப்பட்ட கதைகள் எவ்வாறு இலவசமாக திரைப்படங்கள் மூலமாக அனுமதிக்கப்படுகின்றன.

அதே நேரத்தில் கலையின் விமர்சன வெளிப்பாடுகள் எவ்வாறு வாயை அடைக்கப்படுகின்றன என்பது அதிர்ச்சியளிக்கிறது. நமது நல்லிணக்க நிலத்தை பயங்கரவாதத்தின் மையமாக சித்தரிக்க முயற்சிக்கும் இந்த முயற்சிகளுக்கு எதிராக நாம் ஒற்றுமையாக நிற்க வேண்டும். உண்மை எப்போதும் வெல்லும் என்றும்

தி கேரளா ஸ்டோரி' திரைப்பட ட்ரெய்லர் குறித்து இந்தப் பதிவினை பினராயி விஜயன் பதிவிட்டு இருக்கிறார்.

===========

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in