

நரேந்திர மோடி எக்ஸ் பதிவு
BJP Wins Thiruvananthapuram Local Body Election 2025 : திருவனந்தபுரம், கேரள மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. கடும் தேர்தல் சாவல்களுடன் நடைபெற்ற இந்த தேர்தலில், வெற்றி யார் பக்கம் என்று உள்ளூர் மக்கள் காத்திருந்தனர், இந்தியாவின் பிகார் மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக, உள்ளாட்சி தேர்தலிலும் திருவனந்தபுரத்தில் பசியாற்றி வெற்றி பெற்றது. இதுவே திருவனந்தபுரம் மாநகராட்சியில் முதல் முறையாக பாஜக வென்றுள்ள முதல் வெற்றியாகும் . இதற்காக கேரள மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது; "கேரள மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்த கேரள மக்களுக்கு எனது நன்றிய தெரிவித்துக்கொள்கிறேன்.
மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்களை பாஜகவால் நிறைவேற்ற முடியும்
கேரளத்தில் யுடிஎப் மற்றும் எல்டிஎப் ஆகிய கட்சிகளால் மக்கள் வெறுப்படைந்துள்ளனர். எனவே, நல்லாட்சியை வழங்கவும், அனைவருக்கும் வாய்ப்புகளைக் கொண்ட கேரளத்தை உருவாக்கவும் ஒரே வழி தேசிய ஜனநாயகக் கூட்டணி மட்டுமே என்று மக்கள் தீர்மானித்தனர்.
திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக - தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைத்த வெற்றி கேரள அரசியலில் ஒரு திருப்புமுனை தருணம். மாநிலத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களை பாஜகவால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர். திருவனந்தபுரத்தின் வளர்ச்சியை நோக்கி எங்கள் கட்சி பாடுபட்டு, மக்களின் வாழ்க்கையை எளிதாக்க ஊக்குவிக்கும் என்று திருவனந்தபுர மக்களுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.