

மத்திய அரசு பள்ளிகளில் காலிப்பணியிடங்கள்
KVS Recruitment 2025 Job Vacancy in Tamil : மாநில அரசுகளில் பல்வேறு அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் இருப்பது வழக்கம். ஆனால், குறிப்பாக மத்திய அரசு அங்கீகாரத்திற்கு கீழ் இயக்கப்படும் பள்ளிகளில் படிக்கவும், பணிபுரியவும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஒரு எண்ணமாக இருக்கும். அதன்படி மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு தற்போது காலிப்பணியிடங்கள் இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
ஆசிரியர்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு
நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 9,126, நவோதயா பள்ளிகளில் 5,841 என மொத்தம் 14,967 ஆசிரியர் மற்றும் பணியாளர் பணியிடங்கள்(KVS Recruitment 2025 Job Vacancy in Tamil) காலியாக உள்ளன. இதில் 13,008 பணியிடங்கள் இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியர், முதல்வர், துணை முதல்வர், நூலகர் பதவிகளுக்கானவை. மீதமுள்ள 1,959 பணியிடங்கள் உதவி ஆணையர், நிர்வாக அதிகாரி, இளநிலை உதவியாளர், மூத்த உதவியாளர், உதவி பிரிவு அலுவலர் (ஏஎஸ்ஓ), நிர்வாகப் பணியாளர், நிதி அதிகாரி, பொறியாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் சுருக்கெழுத்தாளர் என ஆசிரியர் அல்லாத பிரிவில் வருகின்றன.
டிசம்பர் 4 ஆம் தேதிதான் கடைசி
இவற்றில் சேர விரும்புவோர் kvsangathan.nic.in மற்றும் cbse.nic.in வலைதளங்கள் மூலமாக டிச. 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்(KVS NVS Recruitment 2025 Last Date in Tamil). இதற்கான எழுத்துத் தேர்வு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் கணினிவழியில் நடத்தப்படவுள்ளது. தேர்வுக்கான ஹால்டிக்கெட் டிசம்பரில் வெளியிடப்படும்.தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும் இந்த பள்ளிகளில், மத்திய அரசுப் பணியாளர்களின் குழந்தைகளே அதிகம் சேர்க்கப்படுகின்றனர்.
புதிய பள்ளிகள் அமைக்க மத்திய அரசு முடிவு
பல்வேறு மாநிலங்களில் போதியளவு பள்ளிகள் இல்லை, காலி பணியிடங்களும் அதிகமாகஇருப்பதாகக் கூறப்படுகிறது. நடப்பாண்டு புதிதாக 57 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில், காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, தகுந்த பட்டபடிப்புகளை முடித்துள்ள ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களுக்கு முந்துங்கள்.