நடைபாதை வசதி கொண்ட இந்திய நகரங்கள்
நடைபாதை வசதி கொண்ட இந்திய நகரங்களின் பட்டியலானது வெளியிடப்பட்டிருக்கிறது , அதன்படி இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தின் லக்னோ முதலிடத்தை பெற்றுள்ளது . தமிழகத்தின் தலைநகரமான சென்னைக்கு நான்காம் இடம் கிடைத்துள்ளது
நடைப்பாதை உட்கட்டமைப்பு வசதி அடிப்படையில் பட்டியல் வெளியிடு
குறிப்பாக இவ்வாறாக நடைப்பாதை வசதி கொண்ட நகரங்களின் பட்டியலானது , முக்கிய நகரங்களில் உள்ள நடைபாதைகளின் தரம், அவற்றின் உட்கட்டமைப்பு மற்றும் அந்த நடைபாதைகள் மக்கள் நடப்பதற்கு ஏதுவாக உள்ளதா என்பதை ஆராய்ந்து அதனடிப்படையில் பட்டியலானது வெளியிடப்படும் .
State of Indian Streets 2026 அறிக்கை
அந்த வகையில் , இந்த பட்டியலை State of Indian Streets 2026" என்ற அறிக்கையின் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது , ஒவ்வோரு வருடமும் இவ்வாறான நகரங்களின் பட்டியலானது வெளியிடப்பட்டு வருகிறது
13.2% சாலைகள் மட்டுமே நடப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது
2026-ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவின் சாலைகள் வேகமாக விரிவடைந்து வந்தாலும் போக்குவரத்து நெரிசலும், பாதசாரிகளுக்கான பாதுகாப்பற்ற சூழலும் இன்னும் பெரிய சவாலாகவே நீடிக்கின்றன.
குறிப்பக் இந்தியாவில் பாதசாரிகள் நடைப்பாதை விபத்தில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கையானதும் அதிகரித்துள்ளது ,மேலும் இந்தியாவின் முக்கிய நகரங்களில் வெறும் 13.2% சாலைகளில் மட்டுமே மக்கள் நடப்பதற்கேற்ற நடைபாதைகள் உள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.
அறிக்கையின் அடிப்படையில் நகரங்களின் பட்டியல்
உத்திரபிரதேச மாநிலமான லக்னோவில் நடைபாதை வசதிகள் 28 சதவீதம் முறையாக இருப்பதாக குறிப்பிடப்பட்டு, பட்டியலில் முதலிடம் வழங்கப்பட்டு இருக்கிறது . 25.9 சதவீதத்துடன் பெங்களூரு இரண்டாம் இடமும், தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத் 15.1 சதவீதத்துடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன. நான்காம் இடம் பிடித்துள்ள சென்னையில் 13.9 சதவீதம் மட்டுமே முறையான நடைபாதை வசதிகள் இருப்பதாக அறிக்கையின் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது
சென்னைக்கு நான்காம் இடம்
நடைபாதை வசதி கொண்ட இந்திய நகரங்களின் பட்டியலானது வெளியிடப்பட்டிருக்கிறது , அதன்படி இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தின் லக்னோ முதலிடத்தை பெற்றுள்ளது .தமிழகத்தின் தலைநகரமான சென்னைக்கு நான்காம் இடம் கிடைத்துள்ளது.
============