

மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையின் மூலம், மஹாராஷ்டிர அரசு கடந்த 16-ஆம் தேதி 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு இந்திய கட்டாயம் என்ற புதிய அரசாணையை வெளியிட்டது.
இதன்மூலம் மஹாராஷ்ட்ர அரசு மூன்றாம் மொழியாக இந்தி கட்டாய மொழியாக மாற்றப்படும் என்று அறிவித்தது.
மஹாராஷ்ட்ர மாநில அரசின் இந்த புதிய அரசாணை மாணவர்களுக்கு கூடுதல் சுமையாக இருக்கும் என்று, காங்கிரஸ் தாக்கரே சிவசேனா, நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே மற்றும் கல்வியாளர்கள் என அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, இந்தி மொழி என்பது மாணவர்களுக்கு விருப்ப பாடம் மட்டும் தான் என்றும், கட்டாய பாடம் கிடையாது என்றும் மாநில அரசு விளக்கம் அளித்திருந்தது.
மேலும், இந்தியை கட்டாயமாக்கும் 2 அரசாணைகளை மஹாராஷ்ட்ர அரசு திரும்பப் பெற்றது மட்டுமல்லாமல், மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக பரிந்துரை வழங்குவதற்காக கல்வியாளர்கள் குழு அமைக்கப்படும் என்று அறிவித்தது.
மாஹராஷ்ட்ரா அரசின் இந்த புதிய அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, உத்தவ் தாக்கரே மற்றும் நவநிர்மாண் சேனா கட்சிகள் ஜூலை 5-ம் தேதி போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தன.
இந்நிலையில், 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளில் இந்தி கட்டாயம் என்ற மாநில அரசின் உத்தரவை மாஹாராஷ்ட்ரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார்.