
இந்தியாவில் தொடரும் சுதேசி இயக்கம்
Ashwini Vaishnaw Urges To Use Mappls : சுதேசி தொழில்நுட்பத்தை பயன்படுத்த பிரதமர் மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அதன்படி, இன்று மத்திய அமைச்சர்களில் இருந்து, இந்திய மக்கள் வரை அனைவரும் நம் நாட்டின் சொந்த தயாரிப்புகளை உபயோகப்படுத்த தொடங்கியுள்ளனர். இதன் ஆரம்பமாக மத்திய அமைச்சர்கள் ஒவ்வொருவரும் ஜோஹோவின் செயலிகளுக்கு மாற தொடங்கியுள்ளனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தன் மெயில் ஐடியை ஜோஹோவிற்கு மாற்றியதை வெளிப்படையாக அறிவித்து, அந்த குறிப்பிட்ட மெயில் ஐடியில் தன்னை தொடருமாறு கேட்டுக்கொண்டார். இதன் அறிவிப்பு பெறும் அளவில் பிரபலமாகி அனைத்து தரப்பு இந்தியர்களையும் முழுமையாக சுதேசிக்குள் இழுத்தது.
தொடரும் அஸ்வினி வைஷ்ணவ் சுதேசி
இதைத்தொடர்ந்து. தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ‘‘அலுவலக பயன்பாட்டுக்காக உள்நாட்டு மென்பொருள் சேவை தளமான ஜோஹோவுக்கு மாறிவிட்டேன்’’ என்று அறிவித்தார். மேலும். ஜோஹோ நிறுவனத்தின் அரட்டை செயலியையும் அவர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகிறார் என்று கூறப்படுகிறது.
மேப்பிள்ஸ் தொடக்கம்
இதன் அடுத்த கட்டமாக உள்நாட்டில் உருவாக்கப்பட்ட பயண வழிகாட்டி செயலியான மேப்பில்ஸை(Mappls App) அவர் பயன்படுத்த தொடங்கி உள்ளார். இந்த செயலியை இந்தியர்கள் அனைவரும் பயன்படுத்தவும் அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். மேப்பில்ஸ் செயலியை பயன்படுத்தி அவர் காரில் பயணம் மேற்கொண்ட வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ வெளியிட்ட மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு மேப் மை இந்தியா நிறுவனம் நன்றி தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க : கூகுளுக்கு இனி பை.பை! உலாவின் அம்சம் இதுதான்!
மேப்பிள்ஸ் ஆக்கம்
அமெரிக்காவில் பணியாற்றிய ராகேஷ், ராஷ்மி தம்பதியர் இந்தியாவுக்கு திரும்பி சிஇ இன்போ சிஸ்டம்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தை தொடங்கினர். பின்னர் இந்த நிறுவனம் மேப் மை இந்தியா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நாடு முழுவதும் சிறிய தெருவைகூட விடாமல் ஆய்வு செய்து டிஜிட்டல் வரைபடத்தை ராகேஷ், ராஷ்மி தம்பதியர் உருவாக்கினர். இந்நிலையில், இந்த செயலியின் வெளியீடுக்கு பிறகு வெறுவாரியாக பதிவிறக்கம் இல்லை, ஆனால் தற்போது இந்தியர்கள் சுதேசியில் இறங்கியுள்ளதால், இந்திய தயாரிப்பான மேப்பிள்ஸில் பயணங்களை தொடர வேண்டும் என மத்திய அமைச்சர் கேட்டு கொண்டது, சாமானியர்களுக்கு பெரும் நம்பிக்கை அளித்து அவர்களையும் உபயோகப்படுத்த செய்கிறது.