நீட் தேர்வு 2026 : முழுக்கை ஆடை அணிய அனுமதி மற்றும் மாணவர்களுக்கான முக்கிய வழிகாட்டுதல்கள்!

நம்பிக்கை சார்ந்த பொருட்கள் மற்றும் ஆடைகளை அணிய அனுமதியுண்டு, ஆனால் அவையும் சோதனைக்கு உட்படுத்தப்படும்.
NEET 2026 Exam: Permission to Wear Full-Sleeve Attire and Important Guidelines for Students!
NEET 2026 Exam: Permission to Wear Full-Sleeve Attire and Important Guidelines for Students!source: google
1 min read

NEET 2026 Exam: Permission to Wear Full-Sleeve Attire and Important Guidelines for Students!

நாளை நாடு முழுவதும் நீட் தேர்வு

நாடு முழுவதும் மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான 'நீட்' (NEET) நுழைவுத் தேர்வு நாளை (மே 3) நடைபெற உள்ளது. இத்தேர்வை தேசிய தேர்வுகள் முகமை ஆணையம் (NTA) நடத்துகிறது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் சித்தா உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு இந்தத் தேர்வின் அடிப்படையிலேயே மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

தேர்வு குறித்த புள்ளிவிவரங்கள்

இந்த ஆண்டு நாடு முழுவதும் சுமார் 22.79 லட்சம் மாணவ - மாணவியர் தேர்வு எழுத உள்ளனர். இந்தியா முழுவதும் 552 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.

தமிழகத்தில் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் எண்ணிக்கை

தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் தேர்வு எழுதுகின்றனர். தலைநகர் சென்னையில் உள்ள 43 மையங்களில் 21,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.

நீட் தேர்வு: ஆடை மற்றும் இதர கட்டுப்பாடுகள்

தேசிய தேர்வுகள் முகமை ஆணையம் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய புதிய ஆடை கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி மாணவர்கள் முழுக்கை ஆடைகள், மெல்லிய ஆடைகள் மற்றும் கம்பளி உடைகளை அணிந்து வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சோதனைக்கு முன்கூட்டியே வர அறிவுறுத்தல்

இருப்பினும், இத்தகைய உடைகளை அணிந்து வரும் மாணவர்கள் சோதனைக்காக (Frisking) தேர்வு மையத்திற்கு முன்கூட்டியே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மத நம்பிக்கை சார்ந்த பொருட்களுக்கு அனுமதி?

நம்பிக்கை சார்ந்த பொருட்கள் மற்றும் ஆடைகளை அணிய அனுமதியுண்டு, ஆனால் அவையும் சோதனைக்கு உட்படுத்தப்படும்.

கூடுதல் தகவல்கள்

தேர்வர்கள் தெளிவான குடிநீர் பாட்டில்களைக் கொண்டு வரலாம். அதேபோல் சாதாரண காலணிகளை மட்டுமே அணிந்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசின் மனநல ஆலோசனைத் திட்டம்

மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கவும், மன உறுதியை அதிகரிக்கவும் தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை 'நட்புடன் உங்களோடு' என்ற திட்டத்தின் மூலம் ஆலோசனைகளை வழங்குகிறது.

மாணவர்கள் பெற்றோர் நலனுக்காக டெலி கவுன்சிலிங்

'டெலி கவுன்சிலிங்' தேவைப்படும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் 14416 அல்லது 104 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு மனநல ஆலோசனைகளைப் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NTA அறிவித்துள்ள எண்கள்

மேலும் நீட் தேர்வு தொடர்பான விளக்கங்களுக்கு மாணவர்கள் 011-40759000 அல்லது 011-69227700 ஆகிய எண்களில் தேசிய தேர்வுகள் முகமையைத் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

=====

logo
Thamizh Alai
www.thamizhalai.in