நீட் தேர்வு முறைகேடு : மாணவர்களுக்கு ஆதரவாக மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி; காங்கிரஸ் அழைப்பு..!

நீட் மற்றும் சிபிஎஸ்இ தேர்வு முறைகேடு மற்றும்,பிரதமரின் நடவடிக்கைகளை கண்டித்து காங்கிரஸார் இன்று மெழுகுவர்த்தி பேரணியை அறிவித்துள்ளனர்
NEET Exam Irregularities: Congress calls for candlelight march in support of students.
NEET Exam Irregularities: Congress calls for candlelight march in support of students.google
1 min read

நீட் தேர்வு முறைக்கேடு, தீவிரமடையும் மாணவர்களின் போராட்டம்

நீட் தேர்வு முறைக்கேடுவிற்கு எதிராக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டமானது தீவிரமடைந்திருக்கும் நிலையில், போராட்டத்தீற்கு ஆதரவாக இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் மாணவர்கள் ,மாணவ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாட்ட்டின் அனைத்து பகுதிகளிலும் மாணவர்கள் தீவிர்மான போராட்டத்தை கையில் எடுத்துள்ளாது குறிப்பிடத்தக்கது

நீட் தேர்வு முறைகேடு ; காங்கிரஸ் பேரணி

நீட் தேர்வு முறைக்கேடுகளுக்கு எதிராக , நீடித்து கொண்டிருக்கும் மாணவ்ர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக இன்று மாலை நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மெழுகுவர்த்திப் பேரணி மற்றும் சத்தியாகிரகப் போராட்டத்தை நடத்துமாறு காங்கிரஸ் கட்சி தனது மாநிலப் பிரிவுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

கே.சி. வேணுகோபால் அறிக்கை

ஒவ்வொரு பேரணியும் மகாத்மா காந்தி அல்லது டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் சிலையை நோக்கிச் சென்று, அங்கு நிறைவடைய வேண்டும். தேர்வுகளின் நம்பகத்தன்மை முழுமையாகச் சீர்குலைந்ததற்கும், நாட்டின் இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதில் தோல்வியடைந்ததற்கும் பொறுப்பேற்று,

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும் நாம் திட்டவட்டமாக வலியுறுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

போராட்டத்தை தடுத்து நிறுத்தும், பல்கலைகழங்களுக்கு ராகுல் காந்தி கண்டனம்

இந்த நிலையில் டெல்லியில் நடந்து வரும் போராட்டத்தில் பங்கேற்க கூடாது என டெல்லி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது , இந்த அறிவிப்பிறகு எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டனங்களை தெரிவித்துள்ளார்

ராகுல் காந்து கூறியுள்ளதாவது

மாணவர்கள் தங்கள் ஜனநாயக உரிமைகளை பயன்படுத்துவதற்காக அவர்களை மிரட்ட உங்களுக்கு எவ்வளவு துணிச்சல்? தயவுசெய்து நினைவில் கொள்ளுங்கள், காலம் வரும்போது இதற்கெல்லாம் நீங்கள் பொறுப்பேற்க வேண்டியிருக்கும்” என்று கூறியுள்ளார்.

மத்திய அரசுக்கு நெருக்கடி

இந்த நிலையில் ,கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டமானது தீவிரமடைந்திருக்கும் நிலையில் மத்திய அரசுக்கு நெருக்கடியானது வழுத்துள்ளது.

இந்த நிலையில் மத்திய கல்வி அமைச்சர் பதவி விலகலுக்கும் ஆம் , இல்லை என்ற பதிலை கேட்கிறோம் என்று , கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை தொடருவோம் என்று கரப்பான பூச்சி கட்சி சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

========================

logo
Thamizh Alai
www.thamizhalai.in