ஜூன் 21ல் நீட் மறு தேர்வு : தேசிய தேர்வு முகமை அறிவிப்பு : அடுத்த ஆண்டு முதல் ஆன்லைன் தேர்வு, முறைகேடுகள் தடுப்பு!

வினாத்தாள் குளறுப்படி காரணமாக ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வு ஜூன் 21 ல் மறுதேர்வு நடைபெறு என்று தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது
NEET re-examination on June 21: National Testing Agency announcement
NEET re-examination on June 21: National Testing Agency announcement google
1 min read

ரத்து செய்யப்பட்ட தேர்வு

வினாத்தாள் கசிந்த விவகாரத்தின் எதிரொலியாக நாடு முழுவதும் கடந்த மே3-ம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், அதற்கு மீண்டும் மறு தேர்வு நடத்தப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது .

இது மாணவர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை உருவாக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது

ஜூன் 21 ல் மறு தேர்வு : தேர்வுகள் முகமை அறிவிப்பு

இந்த நிலையில் வரும் ஜூன் 21-ம் தேதி நீட் மறு தேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வுகள் முகமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த தகவலை தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் என்டிஏ பகிர்ந்துள்ளது . மத்திய அரசின் ஒப்புதலோடு ஜூன் 21-ம் தேதி நீட் மறு தேர்வு நடத்தும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் ,பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல்

மேலும், நீட் தேர்வர்களும், பெற்றோர்களும் எவ்வ்விதமான தகவலாக இருந்தாலும், தேசிய தேர்வுகள் முகமை அதிகார தகவல்களை மட்டும் நம்புமாறு தெரிவித்துள்ளது

இலவச எண்கள் அறிவிப்பு

தேர்வுகள் குறித்து அறிந்துக்கொள்ள மாணவர்கள் email at neet-ug@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியையும், 011-40759000, 011-69227700 ஆகிய தொலைபேசி எண்களையும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

இனி ஆன்லைன் தேர்வு

அடுத்த ஆண்டு முதல் மருத்துவப் படிப்புகளுக்கான NEET நுழைவுத் தேர்வு OMR முறைக்குப் பதிலாக கணினி வழித் தேர்வாக (CBT முறையில்) நடத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட தேர்வு மையங்களில் ஆன்லைனில் தேர்வுகள் நடத்தப்படும். இதன் மூலம், முறைகேடுகள் முற்றிலுமாக தடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

===========

logo
Thamizh Alai
www.thamizhalai.in