
The Network State New Country in Singapore Island : இந்திய-அமெரிக்க தொழிலதிபர் பாலாஜி ஸ்ரீநிவாசன்(Balaji Srinivasan), தனது நெட்வொர்க் ஸ்டேட் கனவை நனவாக்கும் முயற்சியாக சிங்கப்பூர் அருகிலுள்ள ஒரு தனியார் தீவை வாங்கியுள்ளார். கவுன்சில் இன்க் (Counsyl Inc.) நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் காயின்பேஸ்(Coinbase) நிறுவனத்தின் முன்னாள் சிடிஓ ஆக இருந்த பாலாஜி(Balaji), தொழில்நுட்ப நிபுணர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் நிறுவனர்களுக்காக ஒரு பரவலாக்கப்பட்ட டிஜிட்டல்-முதன்மையான தேசம் உருவாக்க வேண்டும் என இலக்கை வைத்துள்ளார்.
இத்தகவலை தனது எக்ஸ் பக்கத்தில் அவர் உறுதிபடுத்தியுள்ளார்.
இந்த நெட்வொர்க் ஸ்டேட் (The Network State) முயற்சியின் மையக் கூறாக அமைந்துள்ளது தி நெட்வொர்க் ஸ்கூல்(Network School). இது உலகம் முழுவதும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு மூன்று மாத குடியிருப்பு பயிற்சி திட்டம்.
புதுமையை மையமாகக் கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்குதல், பங்கேற்பாளர்களின் தனிமனித வளர்ச்சியைத் தூண்டும் சூழலை உருவாக்குதல், உண்மையான உலகத்திற்கான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களை உருவாக்குதல் போன்றவை இத்திட்டத்தின் நோக்கம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.