

தேவையான ஆவணங்கள்
India’s New Passport Rules 2026 : புதிதாக பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் போது பொதுவாக பிறப்பு சான்றிதழ், 10-ம் வகுப்பு மார்க் சீட், அரசின் பிறந்த தேதி பதிவு ஆகியவை இருந்தால் போதும். நாம் புதிய பாஸ்போர்டுக்கு விண்ணப்பிக்கலாம்.
அடுத்ததாக அடையாள சான்று கட்டாயம் தேவை. அதாவது, ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவை தேவைப்படும்.
முகவரி சான்றிற்கு நீங்கள் ஆதார் கார்டு, வங்கி பாஸ்புக், சிலிண்டர் பில், தண்ணீர் பில் ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதே சிறப்பு நிலையாக கூடுதல் சான்று தேவைப்படும். அதன்படி, நீங்கள் பெயர் மாற்றம் செய்திருந்தால் பெயர் மாற்றம் பதிவு சான்று, திருமண சான்று தேவைப்படும்.
உங்கள் குழந்தைக்கு பாஸ்போர்ட் எடுக்க செல்கிறீர்கள் என்றால் குழந்தையின் பிறப்பு சான்று மற்றும் அக்குழந்தையின் அப்பா, அம்மா தகவல்கள் இருந்தால் போதும் ஈஸியாக பாஸ்போர்டுக்கு விண்ணப்பிக்கலாம்.
பாஸ்போர்ட் எடுப்பதில் புதிய மாற்றம்
1.10.2023-க்கு பின் பிறந்தவர்களுக்கு பாஸ்போர்ட் விண்ணப்பிக்க பிறப்பு சான்றிதழ் கட்டாயம் வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.
இந்த தேதிக்கு முன் பிறந்தவர்களுக்கு மேற்குறிப்பிட்ட ஆவணங்கள் போதுமானதாகும். அதுமட்டுமல்லாமல், இனி வரும் பாஸ்போர்டுகள் எல்லாம் சிப் இருப்பது போன்று தான் வர உள்ளது.
அதனால், உங்கள் தகவல்கள் எல்லாம் டிஜிட்டலாக சேமித்து வைத்திருப்பார்கள். முன்பு உங்கள் முகவரி சான்றுகள் அனைத்தும் பாஸ்போர்டின் பின்புறம் தான் பிரிண்ட் செய்வார்கள்.
ஆனால், இனி ஒரு கோர்ட் கொடுத்துவிடுவார்கள். அந்த கோர்டை ஸ்கேன் செய்தால் தான் அதிகாரிகளே உங்கள் அட்ரஸை பார்க்க முடியும்.
ஆன்லைன் அப்ளிகேஷன் போன்ற சேவை முறைகளை வேகமாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எப்படி பாஸ்போர்ட் விண்ணப்பிக்கலாம்
புதிய விதிகளின் படி, நீங்கள் முதலில் ஆன்லைன் ரெசிஸ்ட்ரேஷன் செய்ய வேண்டும். பின்னர் விண்ணப்பிங்களை முழுவதுமாக பூர்த்தி செய்துவிட்டு தேவையான சான்றிதழ்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். அ
டுத்தபடியாக, உங்கள் அப்பாண்ட்மெயிண்டை பாஸ்போர்ட் சேவா கேந்திரா அல்லது போஸ்ட் ஆபிஸ் பாஸ்போர்ட் சேவா கேந்திரா ஆகிய இடங்களில் தேர்வு செய்து கொள்ளலாம்.
இப்போது இருக்கும் புதிய நடைமுறைப்படி போலீஸ் வெரிஃபிகேஷன் ஆன்லைன் மூலமாகவே நடைபெறுகிறது. அதாவது, உங்கள் விண்ணப்ப சான்று, கிரிமினல் ரெக்கார்ட் எல்லாவற்றையும் அவர்கள் டேடா பேஸில் செக் செய்து கொள்வார்கள்.
காவல்துறைக்கு சந்தேகம் இருந்தால் மட்டுமே அவர்கள் வீட்டிற்கு வந்து பார்ப்பார்கள். டேடா பேஸ் மூலம் வெரிஃபிகேஷன் செய்துவிட்டால் உங்கள் போனுக்கு வெரிஃபைட் என்ற குறுஞ்செய்தி வரும்.
இந்த நடைமுறைகள் முடிந்த உடன் பாஸ்போர்ட் கொரியர் அல்லது தபால் மூலம் உங்கள் கைக்கு வந்துவிடும். ரொம்ப அவசரம் என்றால் தட்கல் முறையில் 7-5 நாட்களில் பாஸ்போர்டை பெற்று கொள்ளலாம்.