டூடுல் மூலம் புத்தாண்டு வாழ்த்து : கூகுளின் செலிபிரேடிங் டூடுல்!

2025ம் ஆண்டு இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், 2026ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் வகையில் கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது.
New Year greetings through a doodle - Google's celebratory doodle!
New Year greetings through a doodle - Google's celebratory doodle!google
1 min read

சிறப்பு நாட்களில் டூடுல் வெளியிடும் கூகுள்

google doodle நடப்பு 2025ம் ஆண்டு இன்றுடன் நிறைவுகிறது. இன்றுதான், வார கடைசி நாள், மாத கடைசி நாள், வருடத்தின் கடைசி நாள் என இந்த ஆண்டு முடிவிற்கு எப்படி ஒரு பெயர் சூட்டி விடலாம்.

கூகுள் வெளியீடுகள்

உலகின் முன்னணி தேடுதளமான கூகுள் நிறுவனம் அவ்வப்போது பிரபல ஆளுமைகளின் பிறந்தநாள், பண்டிகை நாட்கள், முக்கிய தினங்கள் போன்ற நாட்களில் சிறப்பு டூடுலை வெளியிடுவது வழக்கமான ஒன்று.

புத்தாண்டை ஒட்டி சிறப்பு டூடுல்

இந்த நிலையில் இன்று இரவு 12 மணியுடன் 2025ம் ஆண்டு நிறைவடைந்து, நாளை 2026வது ஆங்கில புத்தாண்டு பிறக்க உள்ளது. 2026ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் வகையில் வழக்கம் போல் நாளை கொண்டாடும் விதமாக கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டது.

மேலும், இந்தாண்டு நிறைவு பெற்று ஒரு புத்தம் புதிய ஆண்டு நெருங்கிக்கொண்டிருக்கிறது என்பதையும் பயனர்களுக்கு நினைவூட்டுகிறது. ஒரு அத்தியாயத்தின் முடிவையும் மற்றொரு அத்தியாயத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது.

கூகுள் டூடுலின் வடிவம்

கூகுள் வெளியிட்டுள்ள அந்த டூடுலானது, பண்டிகைக்காலங்களை குறிக்கும் வகையில், பலூன்கள், வண்ணக் காகிதத் துண்டுகள் உள்ளிட்டவற்றால் 2026 ஆம் ஆண்டு தங்க ஜொலிப்பாக அலங்கரிக்கப்பட்டு, 2026 ஆம் ஆண்டு பலூனில் வடிவமைக்கப்பட்டு அதன் கீழே ஒரு மிட்டாய் என்று டூடுல் வெளியிட்டுள்ளது.

அந்த டூடுலை தட்டும்போது அந்த மிட்டாய் உடைந்து வெடித்து 2026 பலூன் தன்னை அசைத்து முன்னிலைப்படுத்தி, புதிய ஆண்டு வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.

டூடுலை கொண்டாடும் கூகுள் பயனர்கள்

கோடிக்கணக்கான மக்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கூடி, கடந்த ஆண்டைப் பற்றி சிந்தித்து,புதிய ஆண்டை வரவேற்கின்றனர். விரைவில், 2026ன் தொடக்கத்தை அதிகாரப்பூர்வமாகக் குறிக்கும் வகையில் நள்ளிரவு மணி அடிக்கும் என்பதை டூடுல் நினைவூட்டுகிறது.வாசகர்கள் அனைவருக்கும் அட்வான்ஸ் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளது.

புதிய ஆண்டின் தொடக்கத்தினை முன்னிட்டு, கூகுள் வெளியிட்டுள்ள இந்த டூடுலை பயனர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in