WhatsApp-ல் இனி போன் நம்பர் தேவையில்லை! : 'Username' இருந்தாலே போதும் : ’புதிய அப்டேட்’ பயன்படுத்துவது எப்படி?

வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட் மூலம் இனி மொபைல் எண் இல்லாமல் 'Username' வைத்தே சாட் செய்யலாம். இந்த புதிய அம்சத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்த முழு விவரங்கள் இதோ!
No more phone numbers needed on WhatsApp! A 'username' is enough: How to use the new update?
No more phone numbers needed on WhatsApp! A 'username' is enough: How to use the new update?Ai generated
1 min read

No more phone numbers needed on WhatsApp! A 'username' is enough: How to use the new update?

பிரபல குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப் , தனது பயனர்களின் தனியுரிமையை மேலும் பலப்படுத்தும் நோக்கில் ஒரு புதிய அதிரடி அம்சத்தை அறிமுகம் செய்யவுள்ளது.

இனி வாட்ஸ்அப்பில் மற்றவர்களுடன் சாட் செய்ய உங்களுடைய தனிப்பட்ட மொபைல் எண்களைப் பகிர வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு பதிலாக, பிரத்யேக Username மூலமாகவே கணக்கைத் தொடங்கி உரையாட முடியும்.

முக்கிய அம்சங்கள் மற்றும் பயன்கள்

இந்த புதிய அப்டேட் மூலம் பயனர்கள் தங்களுக்கு பிடித்தமான பிரத்யேக யூசர்நேம்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இந்த அம்சம் அடுத்த சில மாதங்களில் உலகளவில் அனைத்து பயனர்களுக்கும் முழுமையாகக் கிடைக்கவுள்ளது.

இந்தவாரம் தொடக்கம் முதலே பயனர்கள் தங்களுக்கான யூசர்நேம்களை முன்பதிவு செய்யத் தொடங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

'பிளாக் மற்றும் ரிப்போர்ட்'

மேலும், இந்த யூசர்நேம்களைப் பயனர்கள் தேவைக்கேற்ப பின்னாட்களில் மாற்றிக்கொள்ளவோ அல்லது நீக்கிக்கொள்ளவோ முடியும். வழக்கம்போல தேவையற்ற கணக்குகளை 'பிளாக் மற்றும் ரிப்போர்ட்' செய்யும் வசதிகளும் இதில் தொடரும்.

வாட்ஸ்அப் யூசர்நேம் உருவாக்கும் எளிய வழிமுறைகள்

முதலில் உங்கள் வாட்ஸ்அப் செயலியைத் திறந்து, வலது மேல் மூலையில் உள்ள மூன்று புள்ளிகளை (Three vertical dots) க்ளிக் செய்து 'Settings' பகுதிக்குச் செல்லவும்.

  • அங்குள்ள உங்களது சுயவிவரப் பக்கத்தை (Profile) தேர்ந்தெடுக்கவும்.

  • அடுத்து, 'Create username' அல்லது இன்னும் முழுமையாக அப்டேட் ஆகாத பகுதிகளில் 'Reserve username' -> 'Create username' என்பதை அழுத்தவும்.

  • இப்போது நீங்கள் விரும்பும் தனித்துவமான Username-ஐ உள்ளிடவும். அது பயன்பாட்டில் இருந்தால் உங்களுக்கு உறுதிப்படுத்தல் (Confirmation) காண்பிக்கும்.

    இல்லையெனில், பரிந்துரைக்கப்படும் மாற்றுப் பெயர்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

  • இறுதியாக, 'Save' மற்றும் 'Done' என்பதைத் தட்டி உங்களது புதிய யூசர்நேமை உறுதி செய்து கொள்ளலாம்.

உங்களுக்குப் பிடித்தமான யூசர்நேமை மற்றவர்கள் எடுப்பதற்குள் உடனே முன்பதிவு செய்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்!

====

logo
Thamizh Alai
www.thamizhalai.in