யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.4% கட்டணம்! அரசின் கருவூலத்துக்குச் செல்லாது: நிர்மலா சீதாராமன் விளக்கம்

செய்தியாளர்களை சந்திக்கும்பொழுது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொதுமக்களுக்கு அறிவிப்பு ...
No Revenue for Government from UPI MDR, Says Finance Minister
No Revenue for Government from UPI MDR, Says Finance MinisterGoogle
1 min read

₹2,000-க்கு மேற்பட்ட வணிகர் (Merchant) யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.4% MDR கட்டணம் விதிக்கப்படும் என்ற அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த கட்டணம் பொதுமக்கள் மீது சுமத்தப்படாது என்றும், அரசின் கருவூலத்துக்குச் செல்லாமல் டிஜிட்டல் கட்டண சேவைகளை இயக்கும் வங்கிகள் மற்றும் நிறுவனங்களுக்கே பகிரப்படும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

யுபிஐ கட்டணம் குறித்து பரபரப்பு :

நாடு முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறையாக யுபிஐ (UPI) உள்ளது.

இந்நிலையில், ₹2,000-க்கு மேற்பட்ட வணிகர் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.4% MDR கட்டணம் விதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது.

இதனால், இனி யுபிஐ பயன்படுத்தினால் பொதுமக்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உருவாகுமா என்ற கேள்வி எழுந்தது.

விளக்கம் அளித்த நிர்மலா சீதாராமன் :

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், MDR என்பது அரசால் விதிக்கப்படும் வரி அல்ல என்றும், இந்த தொகை மத்திய அரசின் கருவூலத்துக்குச் செல்லாது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், டிஜிட்டல் கட்டண அமைப்புகளை பராமரிக்கும் வங்கிகள், கட்டண சேவை வழங்குநர்கள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுக்கே இந்த தொகை பகிர்ந்தளிக்கப்படும் என கூறியுள்ளார்.

பொதுமக்களுக்கு பாதிப்பு இருக்குமா?

நபர்-நபர் (P2P) யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எந்தவித கட்டணமும் விதிக்கப்படாது என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

நண்பர்கள், உறவினர்கள் அல்லது தனிப்பட்ட தேவைகளுக்காக யுபிஐ மூலம் பணம் அனுப்பும் பயனர்களுக்கு இந்த MDR கட்டணம் பொருந்தாது.

அதே நேரத்தில், வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் மேற்கொள்ளப்படும் ₹2,000-க்கு மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே MDR பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வணிகர்கள் மத்தியில் கவலை :

இந்த புதிய நடைமுறையால் சிறு மற்றும் நடுத்தர வணிகர்களுக்கு கூடுதல் செலவினச் சுமை ஏற்படலாம் என்ற கருத்தும் எழுந்துள்ளது.

குறிப்பாக, தினசரி அதிக அளவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வணிகர்கள் இந்த MDR கட்டணம் குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், டிஜிட்டல் கட்டண சேவைகளின் கட்டமைப்பை பராமரிக்கவும், சேவையை மேம்படுத்தவும் இந்த கட்டணம் உதவும் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

===================

logo
Thamizh Alai
www.thamizhalai.in