சிலிண்டர் விநியோகத்தில் இன்று முதல் OTP கட்டாயம் : மத்திய அரசு அதிரடி!

இன்று முதல் சிலிண்டர் டெலிவரி செய்யப்படும்போது ஓடிபி எண் பெறுவது 100 சதவீதம் கட்டாயமாக்கப்படுகிறது.
OTP Mandatory for Cylinder Delivery Starting Today: Central Government Takes Decisive Action!
OTP Mandatory for Cylinder Delivery Starting Today: Central Government Takes Decisive Action!source: google
1 min read

OTP Mandatory for Cylinder Delivery Starting Today: Central Government Takes Decisive Action!

சிலிண்டர் விநியோகம்: மத்திய அரசு புதிய கட்டுப்பாடு

காஸ் சிலிண்டர் விநியோகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரவும், முறைகேடுகளைத் தவிர்க்கவும் மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இன்றுமுதல் OTP கட்டாயம்

இதன்படி, இன்று முதல் சிலிண்டர் டெலிவரி செய்யப்படும்போது ஓடிபி எண் பெறுவது 100 சதவீதம் கட்டாயமாக்கப்படுகிறது.

புதிய நடைமுறையின் நோக்கம்

சிலிண்டர் திருட்டு மற்றும் கள்ளச்சந்தையில் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படுவதை இந்த புதிய முறை முழுமையாகத் தடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சரியான வடிக்கையாளருக்கு விநியோகம்?

சிலிண்டர்கள் பதிவு செய்த வாடிக்கையாளருக்கு மட்டுமே சென்றடைவதை உறுதி செய்ய எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளன.

தற்போதைய நிலை

ஏற்கனவே நாட்டில் 94 சதவீத அளவில் செயல்பாட்டில் இருந்த இந்த நடைமுறை, இன்று முதல் 100 சதவீதம் முழுமையாகச் செயல்படுத்தப்படுகிறது.

சிலிண்டர் தட்டுப்பாடும் பின்னணியும்

  • போர் சூழல்

    ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவுக்கு எரிபொருள் ஏற்றி வரும் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

  • வணிக சிலிண்டர்

    இதனால் ஏற்பட்ட தட்டுப்பாட்டைக் குறைக்க, மார்ச் 9-ம் தேதி முதல் வணிகப் பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டது.

  • முன்பதிவு இடைவெளி

    வீட்டு உபயோக சிலிண்டர் தடையின்றி வழங்கப்பட்டாலும், அதன் முன்பதிவு இடைவெளி நகரங்களில் 25 நாட்களாகவும், கிராமப்புறங்களில் 45 நாட்களாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிலிண்டர் டெலிவரியின் போது ஓடிபி கட்டாயம்

வாடிக்கையாளர்கள் இனி சிலிண்டர் டெலிவரியின் போது தங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் ஓடிபி எண்ணை வழங்கினால் மட்டுமே சிலிண்டர்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

=====

logo
Thamizh Alai
www.thamizhalai.in