

உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
Supreme Court Notice To Tamil Nadu Government : டி.ஜி.பி. நியமனம் விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவுக்கு 3 வாரத்தில் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
அந்த மனுவில் யு.பி.எஸ்.சி. பரிந்துரை அடிப்படையில் தமிழ்நாடு காவல்துறை இயக்குநரை நியமிக்க தவறியதாகவும் குறிப்பிட்டுள்ளார். தமிழக டி.ஜி.பி. ஆக இருந்த சங்கர் ஜிவால் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு பிறகு முழு நேர டி.ஜி.பி. ஆக யாரும் தேர்வு செய்யப்படாததால் சட்டம் ஒழுங்கு பிரிவு பொறுப்பு டி.ஜி.பி.-யாகவும் மாநில காவல் படைத்தலைவராகவும் டி.ஜி.பி. நிலையிலான ஐபிஎஸ் உயர் அதிகாரி ஜி. வெங்கட்ராமனை தமிழக அரசு ஆகஸ்ட் 31-ஆம் தேதி தற்காலிகமாக நியமித்தது.
யு.பி.எஸ்.சி. பரிந்துரை
யு.பி.எஸ்.சி.-க்கு மாநில அரசு பரிந்துரைத்த பட்டியலில் வெங்கட்ராமனின் பெயரும் இடம் பெற்றுள்ளது. ஆனால், அவரை விட மூத்த அதிகாரிகள் பட்டியலில் இருப்பதால் மேலும், கூடுதலாக வேறு சிலரது பெயர்களை அண்மையில் யு.பி.எஸ்.சி. பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது.
ஐ.பி.எஸ் அதிகாரிகள் பட்டியல்
அந்தப் பட்டியலுடன் மாநில அரசு உடன்படாததால் இந்த விவகாரத்தில் இன்றளவு பிரச்சனை நீடித்த வரும் நிலையில், நிரந்தர டி.ஜி.பி இடமும் காலியாகவே இருந்து வருகிறது. மாநில அரசு அனுப்பி வைக்கும் ஐ.பி.எஸ். உயரதிகாரிகளின் தகுதிப்பட்டியலில் இருந்து முதல் மூன்று அதிகாரிகளின் பெயர்கள், யுபிஎஸ்சி தலைவர் தலைமையிலான உயர்நிலைக்குழு கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு மாநில அரசுக்கு பரிந்துரைக்கப்படும்.
வெற்றிடமாக டி.ஜி.பி பணி
அதனடிப்படையில், மூன்று அதிகாரிகளில் இருந்து ஒருவரை மாநில அரசு முதல்வரின் ஒப்புதலைப் பெற்று நியமித்து அந்த அறிவிப்பு அரசாணையாக வெளியிடப்படும். ஆனால், தற்போது வரை தொடர்ந்து வரும் வெற்றிடமாக இடம்பெயர்ந்து வரும் நிரந்தர டி.ஜி.பி பணிக்கான நியமனம், மேலும் பல காலநிலையை கடக்கும் என்று கூறப்படும் நிலையில், தமிழகத்தில் கோவை சம்பவங்கள் தொடர்ந்து வரும் இந்நிலையில், மாநில அரசின் சட்ட ஒழுங்கு மேலும் மோசமான இறுதி கட்டத்தை எட்டுகிறது என்று சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.