
அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சில நிமிடங்களில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து மதியம் 1.17 மணிக்கு நிகழ்ந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிகிக்கின்றன.
இந்த விமானத்தில் பயணிகள் 242 பேர் பயணம் செய்துள்ளனர். விழுந்து நொறுங்கிய விமானத்தில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் பயணிகளை தேடும் பணியிலும் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் விண்ணை முட்டும் அளவுக்கு கரும் புகைகள் சூழ்ந்துள்ளது. இதனிடையே விமானம் விழுந்து நொறுங்கி தீ பற்றி எரியும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.