தற்காலிகமாக மூடப்பட்ட அகமதாபாத் விமானநிலையம்

ஏர்இந்தியா விமானம் விபத்துக்குள்ளனதை அடுத்து அகமதாபாத் விமானநிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
தற்காலிகமாக மூடப்பட்ட 
அகமதாபாத் விமானநிலையம்
https://x.com/airindia
1 min read

அகமதாபாத் சர்தார் வல்லபாய் பட்டேல் பன்னாட்டு விமான நிலையம், , தற்போது செயல்படவில்லை. அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன அடுத்த அறிவிப்பு வரும் வரை இது தொடரும் என்று விமானநிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறிந்தவுடன் பிரதமர் நரேந்திர மோடி விமானத்துறை அமைச்சர் நாயுடுவை தொடர்பு கொண்டு பேசி நிலைமையை நேரில் ஆய்வு செய்ய அறிவுறுத்தினார். மேலும் மீட்புப்பணிகளை துரிதப்படுத்தவும் உத்தரவிட்டார்.

ஏர் இந்தியா விமானம் 171 விபத்து தொடர்பாக கவலை தெரிவித்த அதானி குழுமத் தலைவர் கெளதம் அதானி“இந்த துயரமான சம்பவம் குறித்து ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நிலைமைக்கு ஒருங்கிணைந்த முறையில் பதிலளிக்க, அதிகாரிகளுடன் நெருங்கிய ஒத்துழைப்புடன் அதானி குழுமம் பணியாற்றி வருகிறது,” என அவர் கூறினார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in