10வது முறையாக முதல்வரானார் நிதிஷ் குமார் : குவியும் வாழ்த்து!

Nitish Kumar Takes Oath 2025 As 10th Time Of Bihar CM : பீகாரில் 10 வது முறையாக நிதிஷ் குமார் பதவியேற்ற நிலையில், அவருக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
PM Modi Amit Shah Attend Nitish Kumar Takes Oath 2025 Ceremony As 10th Time Of Bihar CM
PM Modi Amit Shah Attend Nitish Kumar Takes Oath 2025 Ceremony As 10th Time Of Bihar CM Google
1 min read

நிதிஷ்குமார் பதவியேற்பு

Nitish Kumar Takes Oath 2025 As 10th Time Of Bihar CM : 243 உறுப்பினர்கள் கொண்ட பீகார் சட்டசபையில் 202 இடங்களைப் பெற்று ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அபார வெற்றி பெற்றது. பாரதிய ஜனதா 89, ஐக்கிய ஜனதாதளம் 85 தொகுதிகளில் வெற்றி பெற்று, இண்டியா கூட்ணியை படு மோசமான தோல்விக்கு ஆளாக்கியது.

பிகார் என்டிஏ தலைவராக நிதிஷ்குமார்

இதைத்தொடர்ந்து மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான புதிய அரசு பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் மும்மரமாக நடந்து வந்த நிலையில், நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினிமா செய்து மீண்டும் பதிவி வகிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐக்கிய ஜனதாதளம் எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நடந்தது. இதில் 22 எம்.எல்.சி.க்களும் கலந்து கொண்டனர்.

பதவியேற்ற நிதிஷ்குமார்

கூட்டத்தில், சட்டசபை கட்சித்தலைவராக நிதிஷ்குமார் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, பீகார் முதல்-மந்திரியாக 10-வது முறையாக நிதிஷ் குமார்பதவியேற்றார். தலைநகர் பாட்னாவில் காந்தி மைதானத்தில் நடைபெற்ற விழாவில் கவர்னர் ஆரிப் முகமது கான், நிதிஷ் குமாருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

விழாவில் மோடி, அமித் ஷா

பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு டெல்லி முதல் மந்திரி ரேகா குப்தா, கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் பங்கேற்றனர். துணை முதல் மந்திரியாக இருந்த பாஜகவின் சமராட் சவுத்ரி மந்திரியாக பதவியேற்றுக்கொண்டார்.

பாஜக, லோக் ஜனசக்தி, ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா ஆகிய கட்சிகளுக்கும் நிதிஷ் குமார் கேபினட்டில் இடம் ஒதுக்கப்படுகிறது.

நிதிஷ்குமாருக்கு வாழ்த்து

இந்நிகழ்ச்சியில் நிதிஷ்குமார் அதிகாரப்பூர்வ கையெழுத்திட்டு மீண்டும் பதவி ஏற்றார். பின்னர், கைகளை கும்பிட்டு அதே மேடையில் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார். 10 வது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சிம்மாசனம் ஏறியுள்ள நிதிஷ்குமாருக்கு, தேசிய ஜனநாயக கூட்டணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in