
20 பேர் உயிரிழப்பு :
PM Narendra Modi on Jaipur Bus Fire Accident Death : ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து ஜெய் சால்மர் நகருக்கு நேற்று மதியம் சொகுசு பேருந்து சென்றுகொண்டிருந்தது. அந்த பேருந்தில் 57 பயணிகள் பயணித்தனர். ஜோத்பூர் - ஜெய் சால்மர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது சொகுசு பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்தது. இந்த சம்பவத்தில் பேருந்தில் பயணித்த பயணிகளில் 20 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
பிரதமர் மோடி எக்ஸ் பதிவு
மேலும் இதில் , 16 பேர் படுகாயமடைந்தலையில், பேருந்து தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ஜோத்பூரில் நடைபெற்ற பஸ் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தோர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குடும்பத்தினருக்கு நிவாரணம்
மேலும், பஸ் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் காயமடைந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க : கரூர் சம்பவம், சிபிஐ விசாரணை : ஒருநபர் ஆணையம், SIT விசாரணைக்கு தடை
தொடரும் மோடியின் நிவாரணம்
இதைப்போல், சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் தலா 2 லட்சமும், காயமடைந்து சிகிச்சை பெறுவாருக்கு 50 ஆயிரமும் நிவாரண தொகை அறிவித்தார். அனைத்து மாநில மக்களின் துயர சம்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து நிவாரணம் வழங்குவதன் மூலம் இந்திய மக்கள் ஆறுதல் அடைந்து, நிவாரணம் பெற்று வருகின்றனர் .