அரசியலமைப்பு தின கொண்டாட்டம் 2025 : தலைவர்கள் வாழ்த்து!

PM Narendra Modi Tribute To 76th Constitution Day 2025 : அரசியலமைப்பு தினத்தையொட்டி பிரதமர் உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.
PM Narendra Modi Tribute To 76th Constitution Day Today Of Samvidhan Divas Celebrated To Commemorate Adoption of Constitution of India
PM Narendra Modi Tribute To 76th Constitution Day Today Of Samvidhan Divas Celebrated To Commemorate Adoption of Constitution of IndiaGoogle
1 min read

பிரதமர் மோடி அறிக்கை

PM Narendra Modi Tribute To 76th Constitution Day 2025 : அவர் வெளியிட்ட அறிக்கையில்; இந்த தினத்தில் அரசியலமைப்பை உருவாக்கியவர்களுக்கு நாம் மரியாதை செலுத்துகிறோம். அவர்களின் தொலைநோக்கு பார்வை விக்சித் பாரத் (சுயசார்பு இந்தியா) என்ற இலக்கை நோக்கி நாம் முன்னோக்கி செல்ல ஊக்குவிக்கின்றன.

நம்மை கௌரவிக்கும் அரசியல் அமைப்பு

கண்ணியம், சமத்துவம் மற்றும் சுதந்திரம் ஆகியவற்றுக்கு நமது அரசியலமைப்பு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது. இது நமக்கு உரிமைகளை வழங்கும் போதே, குடிமக்களாகிய நமது கடமைகளையும் நினைவூட்டுகிறது. இந்தக் கடமைகளை நிறைவேற்ற நாம் எப்போதும் முயற்சிக்க வேண்டும்.

ஜனநாயகத்தின் அடித்தளம்

இது வலுவான ஜனநாயகத்தின் அடித்தளமாகும். நமது செயல்கள் மூலம் அரசியலமைப்பு மதிப்புகளை வலுப்படுத்த நாம் உறுதியேற்போம், என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்ணாமலை எக்ஸ் பதிவு

இவரைத்தொடர்ந்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அரசியலமைப்பு தினத்தன்று, நமது அரசியலமைப்பின் காலத்தால் அழியாத மதிப்புகளைப் பேணிக்காப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் நமது பொறுப்பை மீண்டும் உறுதிப்படுத்துவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

பெருமிக்க குடிமக்கள் நாம்

மேலும், இந்தியாவின் பெருமைமிக்க குடிமக்களாக, நமது அரசியலமைப்பின் சிற்பிகளால் வகுக்கப்பட்ட கொள்கைகளை நேர்மை, உறுதிப்பாடு மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் பாதுகாக்கவும், நமது மகத்தான தேசத்தின் கட்டமைப்பை வலுவாகவும் ஒற்றுமையாகவும் இருப்பதை உறுதி செய்யவும் உறுதியெடுப்போம் என்று பதிவிட்டுள்ளார்.

நயினார் நாகேந்திரன் எக்ஸ் பதிவு

மேலும், பாஜக தமிழக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், இன்று நம் பாரத தேசத்தின் வரலாற்றில் ஒரு முக்கியமான நாள். நமது நாட்டின் இறையாண்மை, மக்களாட்சி, சமத்துவம், சமூகநீதி, சுதந்திரம் போன்ற உயர்ந்த கோட்பாடுகளுக்கு உயிர் புகட்டிய அரசியலமைப்புச் சட்டம் ஏற்கப்பட்ட நாள் என்று தெரிவித்துள்ளார்.

உரிமை, பாதுகாப்பு

மேலும். இந்த மகத்தான அரசியலமைப்பு, ஒவ்வொரு பாரத குடிமகனுக்கு பாதுகாப்பான வாழ்க்கை, உரிமைகள், சம வாய்ப்புகள், மரியாதை, மற்றும் முன்னேற்றப் பாதை வழங்கும் சக்திவாய்ந்த ஆவணம் என்றும் இந்த நாள், நம் அரசியலமைப்பை உருவாக்கிய பாரத ரத்னா டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தலைமையிலான அரசியலமைப்புக் குழுவின் அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் முன்னோக்கிய சிந்தனையை நினைவுகூரும் தருணமாகும்.

இன்று, நம் அரசியலமைப்பின் மாண்பையும், கொள்கைகளையும் நெஞ்சில் நிறுத்தி நம் செயலில் பிரதிபலிப்போம் என்று பதிவிட்டு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in