

பிரதமர் மோடி சுற்றுப்பயணம்
PM Modi South Africa Visit : இந்திய பிரதமர் மோடி தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பிற நாடுகளுடனான நட்புணர்வையும், இரு நாடுகளுடனான பாதுகாப்பையும், பொருளாதார வளர்ச்சியையும் பேணி பாதுகாத்தும் வளர்த்தும் வருகிறார்.
ஜி 20 உச்சி மாநாடு
அதன்படி, தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு மோடி சுற்றுப்பயணம் சென்றார். அங்கு நடைபெறும் ஜி 20 மாநாட்டில் கலந்து(G20 Summit in South Africa) கொண்டுள்ளார்.
பிரதமர் மோடி பதிவு
அப்போது அவருக்கு இந்தியர்கள் அளித்த வரவேற்பு இந்தியாவுடனான கலாசார தொடர்பை நிலைநிறுத்தி உயிர்ப்புடன் வைத்திருக்கிறது என புலம்பெயர் இந்தியர்களின் உணர்வை மோடி பாராட்டினார்.
தமிழ் பாடல் பாடி வரவேற்பு
இது குறித்து தனது சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி தமிழில் வெளியிட்டுள்ள பதிவில் ஜோகன்னஸ்பர்கில் தென் ஆப்ரிக்காவின் கிர்மிட்டியா பாடலுடன் 'கங்கா மையா' நிகழ்ச்சியைக் கண்டது எனக்கு மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் தந்தது.
இந்த நிகழ்ச்சியின் மற்றொரு சிறப்பம்சம் இந்தப் பாடல் தமிழில் பாடப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்தவர்களின் நம்பிக்கையையும் தொடர்பறாத மனப்பான்மையையும் இந்தப் பாடல் தன்னகத்தே கொண்டுள்ளது.
இந்தியர்களின் மன உறுதி
வாழ்க்கையில் அவர்கள் ஏராளமான துன்பங்களைச் சந்தித்தனர், ஆனால் அது அவர்களின் ஊக்கத்தைக் குலைக்கவில்லை. பாடல்கள் மற்றும் பிரார்த்தனைகள் மூலம் அவர்கள் தங்கள் இதயங்களில் இந்தியாவை உயிர்ப்புடன் வைத்திருந்தனர்.
எனவே, இந்தக் கலாசாரத் தொடர்பு உயிரோட்டமாக இருப்பதைக் காண்பது மெச்சத்தக்கது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய தென் ஆப்பிரிக்கா கலாச்சார தொடர்பு காலத்தால் அழியாது
கலாசார தொடர்பு என்று மற்றொரு பதிவில், ''இந்தியாவிற்கும், தென் ஆப்ரிக்காவிற்கும் இடையிலான கலாசார தொடர்பு உண்மையிலேயே மனதைத் தொடும் மற்றும் காலத்தால் அழியாதது.
ஜோகன்னஸ்பர்க்கில், எனது இளம் நண்பர்கள் கணபதி பிரார்த்தனை, சாந்தி மந்திரம் மற்றும் பிற தெய்வீக பிரார்த்தனைகளை மிகுந்த பக்தியுடன் பாடினர்.
இதுபோன்ற தருணங்கள் நம் மக்களுக்கு இடையேயான வலுவான உறவை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன'' என மோடி கூறியுள்ளார்.
============