மும்பையில் பிரிட்டன் இளவரசர் வில்லியம் : ஆட்டோ ஓட்டி அசத்திய வைரல் வீடியோ!

மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக மும்பை வந்துள்ள பிரிட்டன் இளவரசர் வில்லியம், மஹிந்திரா நிறுவனத்தின் மின்சார ஆட்டோவை ஓட்டிச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Prince William Electric Auto Mumbai Earthshot Prize 2026
Prince William Electric Auto Mumbai Earthshot Prize 2026source:google
1 min read

Prince William Electric Auto Mumbai Earthshot Prize 2026

மும்பையில் பிரிட்டன் இளவரசர்

இந்தியாவிற்கு வருகை தந்துள்ள பிரிட்டன் இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் மிடில்டன் ஆகியோர் மும்பையில் தற்போது உள்ளனர். அங்கு மும்பை சுற்றுசூழலுக்கு ஏற்ற மின்சார ஆட்டோவை பிரிட்டன் இளவரசர் ஓட்டிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரெக்லமேஷன் பூங்காவில் பிரிட்டன் இளவரசர்

மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக பிரிட்டன் இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் மிடில்டன் இந்தியாவிற்கு வந்துள்ளனர்.

திங்கட்கிழமை (16-11-2026) இந்தியாவிற்கு வந்த அவர்கள் இரண்டாம் நாளான இன்று, மும்பை பாந்த்ரா- வொர்லி கடல் பின்னணியில் அமைந்திருக்கக் கூடிய ரெக்லமேஷன் பூங்காவிற்கு வருகை தந்தனர்.

’எர்த்ஷாட் பரிசு 2026’

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமைத் தொழில்நுட்பங்களை ஊக்குவிக்கும் வகையில் இளவரசன் வில்லியமால் தொடங்கப்பட்ட ’எர்த்ஷாட் பரிசு 2026’ வழங்கும் விழா மும்பையில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்டோ ஓட்டுநராக மாறிய இளவரசர்

’எர்த்ஷாட் பரிசு 2026’ எனும் இப்போட்டியில் பங்கேற்றுள்ள இறுதிப் போட்டியாளர்களை சந்திப்பதற்காக பிரிட்டன் இளவரசர் வில்லியம், இந்தியாவின் 'மஹிந்திரா லாஸ்ட் மைல் மொபிலிட்டி' நிறுவனம் தயாரித்த மின்சார ஆட்டோவை ஓட்ட, ஆட்டோவின் பின் இருக்கையில் அமர்ந்து இளவரசி கேட் மிடில்டன் புன்னகையுடன் ரசித்து பயணம் செய்தார்.

சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

இளவரசர் வில்லியமின் இந்த பயணம், பசுமை போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாகவும், மிகவும் எளிமையானவராகவும் இருப்பதாகவும் அவரது பயண வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சச்சின் டெண்டுல்கருடன் இளவரசர் வில்லியம்

முன்னதாக அரசுமுறைப் பயணத்தின் முதல் நாளான நேற்று, இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என போற்றப்படும் சச்சின் டெண்டுல்கருடன் நேற்று ( 16-11-2026) இளவரசர் வில்லியமும் இளவரசி கேட் மிடில்டனும் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தனர்.

பின்னர் மண்ணால் செய்யப்பட்ட குவளையில் தேநீர் அருந்தியதோடு மட்டுமல்லாமல், மக்களோடு மக்களாக மும்பை மெட்ரோ ரயிலிலும் பயணம் செய்திருந்தனர்.

==============