தெருநாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி : முழுமையாக செயல்படுத்திய சிம்லா

Rabies Vaccination for Stray Dogs in Shimla : தெருநாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை சிம்லா மாநகராட்சி வெற்றிகரமாக செயல்படுத்தியிருக்கிறது.
Rabies vaccination for stray dogs Fully implemented in Shimla Municipal Corporation in Tamil
Rabies vaccination for stray dogs Fully implemented in Shimla Municipal Corporation in Tamil
2 min read

Rabies Vaccination for Stray Dogs in Shimla : இமாச்சல் பிரதேசம், சிம்லா மாநகராட்சி பகுதியில் ஆகஸ்ட் 15 முதல் 29 வரை பெரிய அளவிலான பரவலான நாய்க்கடி தடுப்பூசி முகாம்(Shimla Rabies Vaccine Camp) வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இது பல்வேறு அமைப்புகளின் ஒத்துழைப்பு மற்றும் பொதுமக்களின் பங்கேற்பால் சாத்தியமானது என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

ஷிம்லாவை நாய்க்கடி நோய் இல்லாத நகரமாக மாற்றும் இலக்கை(Street Dog) அடைய, வீடு மற்றும் தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு இந்த தடுப்பூசி முகாம் தொடங்கப்பட்டது.

ஷிம்லா மாநகராட்சி, கால்நடை வளர்ப்புத் துறை, மிஷன் ரேபிஸ் இந்தியா, ஹ்யூமேன் பீப்பிள் என்ஜிஓ ராம்பூர், கம்பேஷன் ஃபார் அனிமல் வெல்ஃபேர் என்ஜிஓ, நெய்பர்ஹூட் வூஃப் டெல்லி, பீப்பல் ஃபார்ம், மற்றும் ஜஸ்ட் பி ஃப்ரெண்ட்லி அசாம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக இது நடைபெற்றது. உள்ளூர் நாய்களுக்கு உணவளிப்பவர்களும் தங்கள் பகுதிகளில் குழுக்களுக்கு வழிகாட்டியாக இருந்தனர்.

ஷிம்லாவின் நகரில் கணக்கிடப்பட்ட நாய்களின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 90 சதவீதத்தை உள்ளடக்கி, 3,507 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. உலக சுகாதார அமைப்பின் (WHO) வழிகாட்டுதல்களின்படி, நாய்க்கடி பரவலைத் தடுக்க 70 சதவீதத்திற்கு மேல் தடுப்பூசி செலுத்தப்ட வேண்டியது அவசியம்.

இந்த முகாம் 2018ஆம் ஆண்டு WHO நிபுணர் ஆலோசனைக் கூட்டத்தின் பரிந்துரைகளுக்கு ஏற்ப முறையாக நடத்தப்பட்டது(Shimla's Innovative Stray Dog Management Initiative). அதாவது இந்த முகாமை ஒரு இயக்கமாக திறம்பட செயல்படுத்த, ஏழு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன. இதில் தடுப்பூசி செலுத்துவோர் , தரவு சேகரிப்பாளர்கள், கைப்பற்றுவோர், வலைப்பற்றுவோர் மற்றும் ஓட்டுநர்கள் ஆகியோர் இடம்பெற்றனர். அவர்களின் ஒருங்கிணைந்த பணி, ஷிம்லா மாநகராட்சியின் கிட்டத்தட்ட அனைத்து வார்டுகளையும் முழுமையாக உள்ளடக்கியதாக இருந்தது.

இது வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதற்காக இமாச்சல பிரதேசத்திற்கு வெளியில் இருந்து வந்த அமைப்புகள் உட்பட அனைத்து அமைப்புகளுக்கும் ஷிம்லா மாநகராட்சி மேயர் சுரேந்தர் சவுகான் நன்றி தெரிவித்தார். இந்த இயக்கத்தின் வெற்றியை இமாச்சல பிரதேச அரசு பாராட்டியது மற்றும் வெறிநாய்க்கடி ஒழிப்பு முயற்சிகளுக்கு இது ஒரு மைல்கல்லாக அங்கீகரிக்கப்பட்டது.

மிஷன் ரேபிஸ் இந்தியாவின் செயல்பாட்டு இயக்குநர் பாலாஜி சந்திரசேகர் கூறுகையில், மிஷன் ரேபிஸ் ஒவ்வொரு ஆண்டும் தெரு நாய்களுக்கு தடுப்பூசிகளை செலுத்துவதற்கு ஷிம்லாவுக்கு ஆதரவளிக்கும். அதேநேரம், வீடு வீடாக சென்று தடுப்பூசி வழங்கும் உத்திகளை வலுப்படுத்தி, ஒட்டுமொத்த பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த உறுதிமொழியை ஆதரிக்கும் வகையில், சிம்லா மாநகராட்சி ஆணையர் பூபிந்தர் அத்திரி, வீட்டு நாய்களுக்கு வீடு வீடாக சென்று தடுப்பூசி வழங்கும் திட்டம் அடுத்த கட்டங்களில் செயல்படுத்தப்படும் என்று உறுதியளித்தார்.

மேலும் படிக்க : வளர்ப்பு நாய்களுக்கு ’மைக்ரோ சிப்’: இல்லாவிட்டால் ரூ.3,000 அபராதம்

இந்த இயக்கத்தை மேலும் முன்னெடுத்துச் செல்ல, குறைந்தபட்சம் தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் தடுப்பூசி செலுத்துதல் நடத்தப்படும், இதனால் ஷிம்லாவில் மனிதர்களுக்கோ அல்லது விலங்குகளுக்கோ நாய்க்கடி நோய் ஏற்படாமல் இருக்கும்.

திட்டமிட்டபடி இவை நடைபெற்றால் ஷிம்லாவை(Street Dog Bite in Shimla) நாய்க்கடி நோய் இல்லாத நகரமாக அறிவிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in