கண்காட்சியில் கோடி விலையில் குதிரை, எருமை- கண்டுகளித்த மக்கள்!

Rajasthan Pushkar Mela 2025 in Tamil : ராஜஸ்தான் புஷ்கர் கண்காட்சியில் ரூ.23 கோடி எருமை, ரூ.15 கோடி மதிப்புள்ள குதிரையை கண்டு களித்த மக்கள்.
Rajasthan Pushkar Mela 2025 Update Anmol Buffalo Worth Rs 23 Crore Horse Animals Participated in Pushkar Fair in Tamil
Rajasthan Pushkar Mela 2025 Update Anmol Buffalo Worth Rs 23 Crore Horse Animals Participated in Pushkar Fair in TamilImage Courtesy : Rajasthan Pushkar Mela 2025 - Horse And Anmol Buffalo Photo from Pushkar Fair
1 min read

புஷ்கர் ஒட்​டக கண்​காட்சி

Rajasthan Pushkar Mela 2025 in Tamil : ராஜஸ்​தான் மாநிலம் புஷ்கரில் ஆண்​டு​தோறும் புஷ்கர் ஒட்​டக கண்​காட்சி நடை​பெறும். இங்கு பல்​வேறு ரக ஒட்டகங்கள், எருதுகள், குதிரைகள் போன்​றவை காட்​சிக்கு வைக்​கப்​படும். இந்​நிலை​யில் இந்த ஆண்டு புஷ்கர் கண்​காட்​சி​யில் ரூ.15 கோடி மதிப்​பிலான குதிரை இடம்​பெற்​றுள்​ளது. சண்​டிகரை சேர்ந்த கேரி கில் என்​பவருக்​குச் சொந்​த​மான இந்த இரண்​டரை வயது குதிரை​தான் கண்​காட்​சி​யில் இடம்​ பெற்​று மக்​களை வெகு​வாகக் கவர்ந்​துள்​ளது.

பல விருதுகளை வென்ற குதிரை

இதுகுறித்து குதிரை​யின் உரிமை​யாளர் கேரி கில் மார்​வாரி இனத்​தைச் சேர்ந்​த​ இந்த குதிரைக்கு ஷாபாஸ் என்று பெயர் வைத்​துள்​ளோம். பல்​வேறு கண்​காட்​சி​யில் இடம்​பெற்​றுள்ள ஷாபாஸ், பல விருதுகளைப் பெற்​றுள்​ளது. இந்த குதிரையை வாங்க போட்டி போடு​கின்​றனர். இது​வரை ரூ.9 கோடி வரை கேட்டு விட்​டுச் சென்​றுள்​ளனர். இந்த குதிரை மூலம் இனப்​பெருக்​கம் செய்ய ரூ.2 லட்​சம் கட்​ட​ணம் பெறுகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

இனப்பெருக்கத்தில் ஏராளமான பணம்

அதே​போல் ராஜஸ்​தானைச் சேர்ந்த அன்​மோல் என்ற எரு​மை​யின் விலை ரூ.23 கோடி என புஷ்கர் ஒட்​டகக் கண்​காட்​சி​யில்(Pushkar Camel Fair 2025) தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. கடந்த ஆண்​டும் இந்த அன்​மோல் எருது கண்​காட்​சிக்கு வந்​திருந்​தது. இதுகுறித்து எரு​மை​யின் உரிமை​யாளர் கூறும்​போது, “அன்​மோல் எரு​மைக்கு தினந்​தோறும் பாலில் நாட்டு நெய், உலர் பழங்​கள் ஆகிய​வற்றை கலந்து சிறப்பு உணவாகத் தரு​கிறோம். 1,500 கிலோ எடை கொண்ட அன்​மோல் எருமை(Anmol Buffalo Weight) இனப்​பெருக்​கம் மூலம் ஏராள​மான பணத்தை ஈட்டி வரு​கிறது" என்​றார்.

கால்​நடை வளர்ச்​சித்​துறை இயக்​குநர் பேச்சு

மேலும் ரூ.10 கோடி மதிப்​பிலான பாதல் என்ற குதிரை, ரூ.25 லட்​சம் மதிப்​பிலான ராணா என்ற எரு​மை​யும் கண்​காட்​சி​யில் கலந்​து​கொண்​டுள்​ளன. இதுகுறித்து ராஜஸ்​தான் மாநில கால்​நடை வளர்ச்​சித்​துறை இணை இயக்​குநர் டாக்​டர் சுனில் கியா “கடந்த 23-ம் தேதி(Rajasthan Pushkar Mela 2025 Date in Tamil) தொடங்​கிய இந்த கண்​காட்​சி, வரும் நவம்​பர் 7-ம் தேதி வரை நடை​பெறும். இது​வரை, 3,021 கால்​நடைகள் கண்​காட்​சிக்​காக பதிவு செய்​யப்​பட்​டுள்​ளன" என்​றார். தொடர்ந்து நடைபெறும் இந்த கண்காட்சியில் இன்னும் பல கால்நடைகள் கலந்துகொள்ள இருக்கும் நிலையில், மிருகங்களின் வருகை மற்றும் விலைகள் குறித்து கேட்பதற்கு, மேலும் பல பொதுமக்கள் கண்காட்சிக்கு வருகை தந்து கால்நடைகளை கண்டு ரசித்து செல்கின்றனர்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in