விமான சேவைகள் முடங்கும் அபாயம்? : விமானக் கட்டணங்கள் உயர வாய்ப்பு? ஒன்றிய அரசுக்கு விமான நிறுவனங்கள் அவசரக் கடிதம்!

மத்திய அரசு விமான எரிபொருள் மீதான 11 சதவீத கலால் வரியை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது.
Risk of Flight Services Being Grounded? Possibility of Rising Airfares? Airlines Send  Letter to the Union Government!
Risk of Flight Services Being Grounded? Possibility of Rising Airfares? Airlines Send Letter to the Union Government!source: Ai Generated
1 min read

Risk of Flight Services Being Grounded? Possibility of Rising Airfares? Airlines Send Letter to the Union Government!

வரலாறு காணாத அளவில் நெருக்கடி

சர்வதேச அரசியல் சூழல் மற்றும் மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, இந்திய விமானப் போக்குவரத்துத் துறை வரலாறு காணாத நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.

விமான நிறுவனங்களின் கூட்டமைப்பு அவசரக் கடிதம்

ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் கூட்டமைப்பு, தங்களைக் காப்பாற்றக் கோரி மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கு அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

இயக்கச் செலவில் 40% எரிபொருளுக்கே!

விமான நிறுவனங்கள் கூட்டமைப்பு எழுதியுள்ள கடிதத்தில், போர்ச் சூழலால் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

எரிபொருளுக்காக மட்டும் 40% செலவிடும் நிலை

ஒரு விமானத்தை இயக்குவதற்கான ஒட்டுமொத்தச் செலவில், சுமார் 40 சதவீதம் விமான எரிபொருளுக்காக மட்டுமே செலவிட வேண்டியுள்ளது. இந்த அதிரடி விலை உயர்வு நிறுவனங்களின் செயல்பாட்டை முழுமையாகச் சவாலுக்குள்ளாக்கியுள்ளது.

நிதியுதவி மற்றும் வரி ரத்து கோரிக்கை

தற்போதைய சூழலில் எரிபொருள் விலையைத் தன்னிச்சையாக நிர்ணயம் செய்வது, விமான நிறுவனங்களுக்கு ஈடு செய்ய முடியாத பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

விமானக் கட்டணங்கள் உயரவும் வாய்ப்பு?

இது தொடர்ந்தால் விமான சேவைகள் ஒட்டுமொத்தமாக நிறுத்தப்படும் அபாயம் உள்ளதாகவும், இதன் காரணமாக விமானக் கட்டணங்கள் உயரவும் வாய்ப்புள்ளதாகத் அஞ்சப்படுகிறது.

தற்காலிக கலால் வரி நிறுத்தம் வேண்டும்

எனவே இந்த இக்கட்டான சூழலில் இருந்து மீள மத்திய அரசு உடனடியான மற்றும் அர்த்தமுள்ள நிதி உதவியை வழங்க வேண்டும் என்றும் விமான எரிபொருள் மீதான 11 சதவீத கலால் வரியை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது.

மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

விமானப் போக்குவரத்துத் துறை முடங்காமல் இருக்க, மத்திய அரசு இந்த கோரிக்கைகளை விரைந்து பரிசீலிக்க வேண்டும் என விமான நிறுவனங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

=====

logo
Thamizh Alai
www.thamizhalai.in