

மத்திய அரச செயலி
Sanchar Saathi Mobile App Latest Update Tamil : மத்திய அரசு மக்கள் பயன்பெறும் வகையில் தொடர்ந்து பல்வேறு செயலிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. ஒவ்வொரு முறையும் மத்திய அரசின் செயலிக்கு எவ்வளவு ஆதரவு பெருகுகிறதோ, அதைப்போலவே எதிர்ப்பும் வலுத்த வரும்.
அதன்படி தற்போது மத்திய அரசு சைபர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமா சஞ்சார் சாத்தி எனும் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
சஞ்சார் சாத்தி செயலியை ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு செல்போன்களில் கட்டாயமாக இடம்பெற செய்ய வேண்டும் என்று மத்திய அரசு நேற்று உத்தரவிட்டது. இதற்கு கடும் எதிர்ப்ப கிளம்பியது.
இந்நிலையில், ‘சஞ்சார் சாத்தி' செயலி வழியாக மக்களை உளவு பார்க்க மத்திய அரசு முயற்சிக்கிறது என்ற குற்றச்சாட்டும் அரசியல் கட்சி தலைவர்கள் மத்தியில் பரவலாக எழுந்தது.
இதனிடையே, மத்திய அரசு சஞ்சார் சாத்தியின் அம்சங்கள் குறித்தும் விளக்கியுள்ளது. மத்திய அரசு இத்தனை நன்மைகளைப் பட்டியலிட்டாலும் கூட இந்த செயலிக்கு எதிர்ப்பு பரவலாக இருக்கிறது.
ஜோதிராதித்ய சிந்தியா விளக்கம்
அதுவும் ஆப்பிள் இன்க் நிறுவனம் இந்திய அரசின் இந்த உத்தரவு ஏற்புடையது அல்ல என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில், அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இது குறித்து மக்களவையில் விளக்கமளித்தார். இது குறித்து அவர், “சஞ்சார் சாத்தி செயலி மூலம் யாரையும் உளவு பார்க்க முடியாது.
சஞ்சார் சாத்தி பாதுகாப்பானது
அது நடக்கவும் வாய்ப்பில்லை. பிரதமர் மோடி தலைமையிலான அரசு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும். மக்களின் பரிந்துரைகள் மற்றும் கருத்துகளின் அடிப்படையில் இவ்விதிகளில் தேவையான மேம்பாடுகளைச் செய்ய தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
சஞ்சார் சாத்தி ஆஃப் கட்டாயமில்லை
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் செல்போன்களில் சைபர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சஞ்சார் சாத்தி ஆஃப் கட்டாயம் என மத்திய அரசு அண்மையில் அறிவித்ததாக தகவல் வெளியானது. ஆனால் அதற்கு தற்போது எதிர்ப்பு வலுத்த வந்த நிலையில், சைபர் பாதுகாப்பிற்கான சஞ்சார் சாத்தி ஆஃப் கட்டாயமில்லை என்பதை உறுதிப்படுத்தி,மத்திய அரசு வாஃபஸ் பெற்றது.
=============