ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம்: 2025 மோதலுக்குப் பின் இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அமைச்சர்!

இந்தியாவிற்கு வருகை தந்துள்ள பாகிஸ்தான் அமைச்சர் முசாதிக் மாலிக் குறித்து...
Regarding Pakistan’s Minister Musadik Malik, who is currently visiting India
Regarding Pakistan’s Minister Musadik Malik, who is currently visiting Indiasource:google
1 min read

இந்தியாவில் பாகிஸ்தான் அமைச்சர்

கடந்த 2025 ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற மோதலுக்குப் பிறகு, தற்போது பாகிஸ்தானில் இருந்து அமைச்சர் ஒருவர் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார்.

டெல்லியில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம்

இந்தியாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் நடைபெறும் நிலையில், பாகிஸ்தான் நாட்டின் சார்பில் பங்கேற்பதற்காக அந்நாட்டின் பருவநிலை அமைச்சரான முசாதிக் மாலிக் இன்று ( 20-11-2026) டெல்லிக்கு வருகை தந்துள்ளார்.

2023 ஆம் ஆண்டில் வருகை தந்த பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர்

முன்னதாக கோவாவில் கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி இந்தியாவிற்கு வந்தார்.

பின்னர் 2025 ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. அதன்பிறகு பாகிஸ்தானில் இருந்து அமைச்சர் ஒருவர் கூட இந்தியாவிற்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜ தந்திர உறவுகளை முறித்துக்கொண்ட இந்தியா - பாகிஸ்தான்

மேலும், பாகிஸ்தானின் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் பதிலடி நடவடிக்கைகளைத் தொடர்ந்து இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களின் எல்லைகளை மூடின. தொடர்ந்து தங்களது ராஜதந்திர உறவுகளையும் முறித்துக்கொண்டன.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நான்கு நாள்கள் நடைபெற்ற மோதலில் சுமார் எழுபது பேர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே மேலும் உறவுகள் பாதிப்படைந்து , விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்கவும் மறுத்து வந்தன.

அதேபோல் இந்த ஆண்டில் (2026) இந்தியாவில் நடைபெற்ற ஆசிய ஹாக்கி போட்டியிலும் பாகிஸ்தானின் தேசிய அணி பங்கேற்காமல் வெளியேறியது.

இந்நிலையில் தான் கடந்த 2023 ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போது, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் அரசின் சார்பில் பருவநிலை அமைச்சர் முசாதிக் மாலிக் டெல்லி வந்துள்ளது அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது.

பிரதமர் மோடியின் முக்கிய உரை

நவம்பர் 22 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கூட்டத்தில் 10 நாடுகளைச் செர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கின்றன. முக்கியமாக இந்த கூட்டத்தில், பிரதமர் மோடி தலைமையேற்று உரையாற்ற இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

==================