

மாநிலங்களில் தொடரும் சிறப்பு தீவிர திருத்தம்
SIR Electoral Roll Begins in Assam State : இந்திய தேர்தல் ஆணையம் ஒவ்வொரு மாநிலமாக வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று அந்தந்த மாநில தேர்தல் ஆணையத்திற்கு சுற்றிக்கை அனுப்பி தெரிவித்து வருகிறது. முதலாவதாக பிஹாரில் தொடங்கிய இந்த சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் நடைபெற்று, தேர்தலும் முடிவடைந்ததையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி வாகை சூடி மீண்டும் 10 வது முறையாக நிதிஷ்குமாரை முதல்வராக ஆட்சியில் அமைத்தது.
இந்த தேர்தல் நடைபெறும் முன்பே, தமிழகத்தில் வருகிற 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தத்திற்கு தமிழகத்தில் உள்ள சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையிலும் எஸ். ஐ.ஆர் பணிகள் தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அஸ்ஸாமில் எஸ்.ஐ.ஆர் பணி
இதைத்தொடர்ந்து அஸ்ஸாம் மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிக்கு தோ்தல் ஆணையம் அனுப்பிய சுற்றறிக்கையில், அசாம் மாநிலத்தில் வரும் 2026-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி வாக்காளருக்கான தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வாக்குச்சாவடி நிலைய அலுவலா், வீடு வீடாகச் சென்று தங்களிடம் உள்ள ஏற்கெனவே நிரப்பப்பட்ட பதிவேட்டை சரிபாா்க்கும் பணியை மட்டும் மேற்கொள்வார் என்று, மாநில தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எஸ்.ஐ. ஆர் பணிக்கு அஸ்ஸாம் அரசு ஆதரவு
2026-ஆம் ஆண்டு பிப்ரவரி 10-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தம் மேற்கொள்ளும் தோ்தல் ஆணையத்தின் முடிவை வரவேற்றுள்ள மாநில முதல்வா் ஹிமந்த பிஸ்வா சா்மா, இந்தப் பணிக்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பை அளிக்கும் என்றும் அவா் தெரிவித்துள்ளார்.