

ரயில்வே நிர்வாகத்தின் புதிய அப்டேட்டுகள்
Southern Railway Launch Bedroll For Non AC Sleeper Class Passengers : தொலைதூர பயணங்களுக்கு ரயில் சேவை முக்கிய பங்காற்றி வருகிறது. பெரும்பாலான பயணிகள் தொலைதூர பயணங்களுக்கு ரயில்வேயில் மட்டும் உள்ள சொகுசு சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால், ரயில்வே நிர்வாகம் பயணிகளுக்கு ஏற்ப பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. ரயில்களில் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணித்து வருகின்றனர். தொடர்நது ரயில்வே நிர்வாகம், பயணிகளை உற்சாகப்படுத்தும் விதமாக பல்வேறு விசயங்களை செய்து வருகிறது. அதன்படி, தற்போது புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.
தலையணை போர்வையுடன் டிக்கெட் பதிவு
இனி Non AC பெட்டியிலும் தலையணை, போர்வை ரயில்களில் பயணிப்பவர்கள் ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். ரயில்களில் சாதாரண பெட்டிகள், சாதாரண ஸ்லீப்பர் பெட்டிகள், ஏசி ஸ்லீப்பர் பெட்டிகள் என்று இருக்கும். இதில், அந்தந்த பெட்டிகளுக்கு ஏற்ப இந்திய ரயில்வே நிர்வாகம் கட்டணங்களை வசூலித்து வருகிறது.
சாதரண ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணிப்பவர்களுக்கும் இனி தலையணை
ஏசி பெட்டிகளில் உள்ளவர்களுக்கு இலவசமாக தலையனை, போர்வைகளை வழங்கிவருகிறது ரயில்வே நிர்வாகம். ஆனால், மற்ற பெட்டிகளில் பயணிப்பவர்கள், கட்டணத்திற்கு ஏற்ப பயணிக்கின்றனர், எந்த ஒரு கூடுதல் வசதிகள் இல்லாமல். அதன்படி, ரயில்களில் சாதாரண ஸ்லீப்பர் வகுப்பு பயணிகளுக்கும் ஜனவரி 1ஆம் தேதி முதல் தலையணை, போர்வை வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே அறிவிப்பு
கட்டணம் எவ்வளவு? ஜனவரி 1, 2026 முதல், ஏசி அல்லாத ஸ்லீப்பர் வகுப்பு பயணிகளுக்காக கட்டண அடிப்படையில் தலையணை, போர்வை வழங்கப்பட உள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பின்படி, சென்னை கோட்டம் 2023–24 ஆம் ஆண்டில் புதிய புதுமையான கட்டணமில்லா வருவாய் யோசனைகள் திட்டத்தின் கீழ் ஒரு முன்னோடி திட்டத்தை செயல்படுத்தியது. இந்த திட்டம் பயணிகள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனால், பயணிகளுக்கு கட்டண அடிப்படையில் தலையணை, போர்வை வழங்க திட்டமிடப்பட்டது.
3 ஆண்டுகளுக்கு திட்டம்
தலையணை, தலையணை கவர், போர்வை மொத்தமாக சேர்ந்து ரூ.50 கட்டணமாக வழங்கப்பட உள்ளது. போர்வை மட்டும பெற ரூ.20 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு தலையணை, ஒரு தலையணை கவருக்கு ரூ.30 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி முதற்கட்டமாக 10 ரயில்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சென்னை கோட்டத்தில், பத்து ரயில்களில் மூன்று ஆண்டுகளுக்கு இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஆண்டுக்கு 28.29 லட்சம் வருமானம்
படுக்கை விரிப்புகளை கொள்முதல் செய்தல், இயந்திரம் மூலம் சுத்தம் செய்தல், விநியோகித்தல் உள்ளிட்ட பணிகளை உரிமம் பெற்ற ஒப்பந்ததாரர் நிர்வகிப்பதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஸ்லீப்பர் வகுப்பு பயணிகளுக்கு படுக்கை விரிப்பு வழங்கவதன் மூலம் ஆண்டுக்கு உரிமக் கட்டணமாக சுமுர் 28.29 லட்சம் கிடைக்கும் எனவும் ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
தலையணை போர்வை வழங்கப்படும் 10 ரயில்கள்
10 ரயில்கள் என்னென்ன? இந்த வசதி ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் ரயில் எண் 12671 / 12672 நீலகிரி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், 12685 / 12686 மங்களூர் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், ரயில் எண் 16179 / 16180 மன்னார்குடி எக்ஸ்பிரஸ், ரயில் எண் 20605 / 20606 திருச்செந்தூர் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், ரயில் எண் 22651 / 22652 பாலக்காடு எக்ஸ்பிரஸ், ரயில் எண் 20681 / 20682 சிலம்பு சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், ரயில் எண் 22657 / 22658 தாம்பரம்-நாகர்கோவில் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், ரயில் எண் 12695 / 12696 திருவனந்தபுரம் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், ரயில் எண் 22639 / 22640 ஆலப்புழா சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், ரயில் எண் 16159 / 16160 மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில்களில் முதற்கட்டமாக சாதாரண ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகளில் பயணிப்பவர்கள் தலையணை, போர்வை கட்டண அடிப்படையில் வழங்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.