

மத்திய அரசில் காலிப் பணியிடங்கள்
SSC GD Recruitment 2026 Notification : எஸ்எஸ்சி எனப்படும் ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வருகிறது. அந்த வகையில் தற்போது 25,487 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
எஸ்எஸ்சி வேலைவாய்ப்பு
மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை ஸ்டாப் செலக்சன் கமிஷன் எனப்படும் எஸ்எஸ்சி நிரப்பி வருகிறது. தமிழக அரசு துறைகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களை எப்படி டிஎன்பிஎஸ்சி நிரப்புகிறதோ அதேபோல, மத்திய அரசு துறைகளில் உள்ள பல்வேறு பணியிடங்கள் எஸ்எஸ்சி உரிய அறிவிப்புகள் வெளியிட்டு நிரப்புகிறது.
தகுதியானோர் பணிக்கு முந்துங்கள்
மத்திய அரசு வேலை காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப உரிய அறிவிப்புகள் வெளியிட்டு, தேர்வு நடத்தி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. மத்திய அரசு துறைகளில் பணிக்கு சேர வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் பல லட்சக்கணக்கான தேர்வர்கள் எஸ்எஸ்சி வெளியிடும் இந்த தேர்வு அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பார்கள்.
25 ஆயிரம் காலிப்பணியிடங்கள்
அந்த வகையில் தேர்வர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மெகா அறிவிப்பு ஒன்றை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது. மொத்தம் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன என்பது பற்றிய விவரங்கள் இதோ.
படைவாரியான காலியிடங்கள்
பணியிடங்கள் விவரம்: கான்ஸ்டபிள் (GD) - 25,487 காலியிடங்கள்
படை வாரியான காலியிட விவரங்கள்
BSF - 524 CISF - 13,135 CRPF - 5,366 SSB - 1,764 ITBP - 1,099 AR - 1,556 SSF - 23
பெண் விண்ணப்பதாரர்களுக்கான காலியிட விவரங்கள் BSF - 92 CISF - 1460 CRPF - 124 ITBP - 194 AR - 150
கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இருந்து பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பாக 01.01.2026- தேதிப்படி 18 வயது முதல் 23 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது, விண்ணப்பதாரர்கள் 2003 க்கு முன்பாகவோ, 01.01.2008 க்கு பிறகோ பிறந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது என்று அறிவித்துள்ளனர்.
எஸ்சி/எஸ்டி பிரிவினர் என்றால் 28 வயது வரை விண்ணப்பிக்கலாம். ஒபிசி பிரிவினர் என்றால் 26 வயது வரையும், முன்னாள் ராணுவத்தினர் என்றால் அரசு விதிமுறைகளின்படி சலுகைகள் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளம்
* மத்திய அரசின் 7-வது ஊதிய கமிஷன் படி ரூ.21,700/- to ரூ. 69,100/ வரை கிடைக்கும்.
தேர்வு முறை:
தேர்வு முறையை பொறுத்தவரை உடல் தகுதி தேர்வு / உடல் திறன் தேர்வு/ மருத்துவ பரிசோதனை/சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கணிணி வழி தேர்வு நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைபெறும். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை, வேலூர், கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிப்பது எப்படி?
தகுதியுள்ள தேர்வர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது. * விண்ணப்பிக்க வரும் 31.12.2025 கடைசி நாளாகும். விண்ணப்பங்களை திருத்த அவகாசம்: 08.01.2026 முதல் 10.01.2026 (23:00) ஆகும். * தேர்வு நடைபெறும் மாதம்: 2026 பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை
தேர்வு அறிவிப்பினை படிக்க:
https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/notice_01122025.pdf