

ராணுவம் பயங்கரவாதிகள் இடையே மோதல் :
காஷ்மீர் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் தீவிரவாதிகள் மேற்பொட்டோர் கொல்லப்பட்டனர் என இந்தியா ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தாக்கில் அமைதியைக் குலைப்பதற்கான முயற்சிகள் உள்ளிட்ட சதி செயல்களை செய்ய பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது.
இதை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் முழுவதும் பயங்கரவாதிகளை தேடும் நடவடிக்கைகளை பாதுகாப்புப் படைகள் தீவிரப்படுத்தி உள்ளன.
அதிரடி சோதனை :
ஜம்மு காஷ்மீர் போலீசார், இந்திய ராணுவம் மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படைகள் நடத்திய அதிரடி நடவடிக்கையின் போது, 5 பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாதி கூட்டாளிகள் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
பாரமுல்லாவில் உள்ள ஷோபியான், புல்வாமா, சோபோர் மற்றும் குல்காம் மாவட்டங்களில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
தொடர்ந்து வரும் தேடுதல் வேட்டை :
இதனிடையே இந்தியா ராணுவ அதிகாரிகள் அங்கு முகாமிட்டு தேடுதல் வேட்டையை தொடர்ந்து வருகின்றனர் .
அதுமட்டுமல்லாமல் இந்தியா உளவுப்பிரிவு அதிகாரிகளும் தீவிரவாதிகள் நடமாட்டம் மற்றும் அவர்களுக்கு மறைமுகமா உதவ கூடிய நபர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன :
இந்த நடவடிக்கைகளின் போது, பாதுகாப்புப் படைகள் பெருமளவிலான ஆயுதங்கள், வெடிமருந்துகள், கையெறி குண்டுகள் மற்றும் தேசவிரோத ஆவணங்கள் மற்றும் சுவரொட்டிகளையும் மீட்டெடுத்தன.
காஷ்மீர் முழுவதும் உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
எல்லைகளில் பாதுகாப்பு தீவிரம் :
பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் சர்வதேச சூழ்நிலைகளை முன்னிட்டு, நாட்டின் எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவின் பல்வேறு எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், எல்லைப் பாதுகாப்புப் படையினர் கூடுதல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.