இந்தியாவில் அறிமுகமான டெஸ்லா 'ஒய்' மாடல் கார் : சிறப்பம்சங்கள்

Tesla Model Y Car Specifications in Tamil : மும்பையில் டெஸ்லா நிறுவனம் தனது கார் ஷோரூமை தொடங்கியுள்ளது. அங்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள 'ஒய்' மாடல் காரின் சிறப்பம்சங்களை விவரிக்கிறது இந்தக் கட்டுரை.
Tesla Model Y Car Features and Specifications, Battery Capacity, Price in India
Tesla Model Y Car Features and Specifications, Battery Capacity, Price in Indiahttps://www.tesla.com/
2 min read

Tesla Model Y Car Specifications in Tamil : மின்சார வாகனத் துறையில் உலகளவில் மிகப் பெரிய புரட்சியை உருவாக்கி வரும் நிறுவனம் டெஸ்லா. அதன் மாடல் S, மாடல் 3, மாடல் X ஆகியவை உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிலையில், டெஸ்லா நிறுவனத்தின் எஸ்யூவி வாகனமான மாடல் ஒய்(Model Y) தற்போது இந்திய சந்தையில் அறிமுகமாகவிருக்கிறது. நாட்டின் மின்சார வாகனப் பொலிவில் இது ஒரு முக்கியமான கட்டமாகக் கருதப்படுகிறது.

காரின் வடிவமைப்பு எப்படி ? :

Model Y என்பது ஒரு நடுத்தர அளவிலான எஸ்யூவி. இருப்பினும் வெளிப்புறத்தில் இது ஒரு பெரிய, குடும்பக் கார் போலவே தோன்றும். இதில் 5 பேர் வசதியாகஅமரக்கூடிய இடமுண்டு. மேலும், 7 சீட் ஆப்ஷனும் கிடைக்கும், இது பெரிய குடும்பங்கள் பயணிக்க ஏற்ற வசதி உள்ளது எனலாம்

மின்சார சக்தி மற்றும் ரேஞ்ச்:

Model Y இரு முக்கிய வேரியண்ட்களில் கிடைக்கிறது. Long Range (Dual Motor All-Wheel Drive) முழு சார்ஜில் சுமார் 505 கிமீ வரை பயணிக்கலாம். 0-100 கிமீ வேகம் சுமார் 5 விநாடிகளில் எட்டும்.

Performance Model இன்னும் வேகமானது – 0-100 கிமீ வேகம் 3.5 விநாடிகளில். அதிகபட்ச வேகம் சுமார் 250 கிமீ/மணி வரை. இவை இரண்டும் Dual Motor All-Wheel Drive வகையில் வருகின்றன – அதாவது இரண்டு மோட்டார்கள் (முன்னிலும் பின்னும்) சுழற்சி இயக்கத்தை வழங்குகின்றன, இது பாதுகாப்பையும் கம்பீரச் செயல்திறனையும் உறுதி செய்கின்றது.

சார்ஜிங் வசதிகள் :

டெஸ்லா சூப்பர் சார்ஜர்(Charging Capacity) உலகளவில் விரைந்து செயல்படும் சார்ஜிங் நெட்வொர்க். இந்தியாவிலும் இதனை டெஸ்லா விரைவில் நிறுவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹோம் சார்ஜிங் (Home Charging): வீட்டிலேயே நள்ளிரவில் சார்ஜ் செய்யும் வசதியும் உண்டு. சூப்பர் சார்ஜர் மூலம் சுமார் 30-40 நிமிடங்களில் 80% வரை சார்ஜ் செய்யலாம். ஹோம் சார்ஜரில் 8-10 மணி நேரம் தேவைப்படும்.

மேலும் படிக்க : இந்தியாவில் கால் பதித்த ’டெஸ்லா’ : மும்பையில் ஷோரூம் திறப்பு

உள்ளமைவு தொழில்நுட்பங்கள் :

15-இன்ச் டச் ஸ்கிரீன் என்பது மைய கணினி அமைப்பு ஆகும். எல்லா கட்டுப்பாடுகளும் இதில்தான் அடங்கும். Tesla App கையைத் தொட்டே காரை கட்டுப்படுத்த முடியும். அதாவது கார் திறப்பு, மூடுதல், சார்ஜ் நிலை, இடம் கண்காணிப்பு உள்ளிட்டவை. மேலும் OTA Updates கார் மென்பொருள் நேரடி இணையம் மூலம் புதுப்பிக்கப்படும்.

Autopilot: எனப்படும் டெஸ்லாவின் நுண்ணறிவுப் பயணக் கட்டுப்பாடு, பாதுகாப்பான ஓட்டத்தை உதவிகரமாக இயக்கும் தன்மை கொண்டது.

பாதுகாப்பு அம்சங்கள்:

5-ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீடு கொண்டது.அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தரத்திற்கும் இணையானது. Emergency braking, collision warning, lane assist போன்ற பல சிறந்த பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. முழு கண்ணோட்ட கேமராக்கள் மற்றும் சென்சார்கள் –360° பார்வை வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளன.

டெஸ்லா காரின் விலை:

வரிகள் உள்படஎதிர்பார்க்கப்படும் விலை ₹70 லட்சம் முதல் ₹90 லட்சம் வரை இருக்கும் என நிபுணர்கள் மதிப்பீடு(Tesla Model Y Price in India) செய்கிறார்கள். எனினும் விலை மாறுதலுக்குட்பட்டது.

முன்னதாக டெஸ்லா இந்தியாவில் உற்பத்தி மையம் அமைக்க அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இது நடைமுறைக்கு வந்தால், விலைகள் குறைய வாய்ப்புள்ளது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in