நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சோதனை ஓட்டம் : மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் இயக்கம்

நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில், மணிக்கு 70 கி.மீ., வேகத்தில் இயக்கப்பட்டு வெற்றிகரமாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது.
The country's first hydrogen train has been successfully tested, running at a speed of 70 km/h.
The country's first hydrogen train has been successfully tested, running at a speed of 70 km/h. google
1 min read

முதன் முறையாக இயக்கப்படும் ஹைட்ரஜன் ரயில்

The country's first hydrogen train has been successfully tested, running at a speed of 70 km/h. நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயிலை, ஹரியானா மாநிலம் ஜிந்த் - லலித் கேரா இடையே, மணிக்கு 70 கி.மீ., வேகத்தில் இயக்கி, வெற்றிகரமாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது.

ஐ.சி.எப்., ஆலையில் தயாரிக்கப்படும் ரயில்

நாட்டிலேயே முதன் முறையாக இயக்கப்படும் இந்த ரயிலை சென்னையில் ஐ.சி.எப்., ஆலையில், 118 கோடி ரூபாய் செலவில், தயாரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

ஹைட்ரஜன் ரயிலால் ஏற்படும் பயன்

இந்த ஹைட்ரஜன் பயன்படுத்துவதால் குறைந்த அளவிலான நீராவியை மட்டுமே வெளியிடுவதால், சுற்றுச்சூழலுக்கு பெரிதளவில் பாதிப்பு ஏதும் ஏற்படாது.

சுற்றுச்சூழலுக்கு உகந்தது

மின்சாரத்தில் இயங்கும் ரயிலை விட,இது சுற்றுசூழலுக்கு எந்த அளவிலும் பாதிப்பை உண்டாகாமல் ,சுற்றுசூழல் பாதுகாப்பிற்கு உதவுகிறது.

எவ்வளவு தூரம் மற்றும் வேகத்தில் இயக்கப்படுகிறது

ஈந்த ஹைட்ரஜன் ரயில் அதிகபட்சமாக, 50 முதல் 80 கி.மீ., துாரம் வரியிலும் மணிக்கு 70 கி.மீ., வேகத்தில்லும் இயக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றது.

இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியது

ரயில்வேயில் அடுத்த கட்ட தொழில்நுட்பமாக, ஹைட்ரஜன் ரயில் இயக்கத்தில், கவனம் செலுத்தப்பட்டு வருவதகவும் . இதற்கான, அனைத்து கட்ட சோதனைகளும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த ரயிலில், 10 பெட்டிகள் இருக்கும். ஒவ்வொரு பெட்டியிலும், 84 பேர் பயணம் செய்யலாம்.

1,200 குதிரை சக்தி திறன்

ரயில் இன்ஜின், 1,200 குதிரை திறன் கொண்டு இருப்பதாகவும் ரயில்வே பாதுகாப்பு ஆணையரகம் ஒப்புதல் பெற்று, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in