

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் சுபான்ஷு சுக்லாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
இந்தியா, ஹங்கேரி, போலந்து மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி வீரர்களை ஏற்றிச் சென்ற விண்வெளிப் பயணத்தின் வெற்றிகரமான ஏவுதலை நாங்கள் வரவேற்கிறோம்.
இந்திய விண்வெளி வீரரும் குரூப் கேப்டனுமான சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற உள்ளார்.
சுபான்ஷு சுக்லா 140் கோடி இந்தியர்களின் விருப்பங்கள், நம்பிக்கைகள் மற்றும் அபிலாஷைகளை தன்னுடன் சுமந்து செல்கிறார்.
அவருக்கும் மற்ற விண்வெளி வீரர்களுக்கும் வெற்றி கிடைக்க வாழ்த்துகிறோம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கும் சுபான்ஷூ சுக்லாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய விமானப்படையும் அவருக்கு தனது நல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளது.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்வு, சுபான்ஷு சுக்லாவை நினைத்து ஒட்டுமொத்த தேசமும் பெருமை கொள்கிறது என்று வாழ்த்தியுள்ளார்.
====