எஸ்.ஆர். பணிக்கு மீண்டும் கால அவகாசம்- 3 நாட்கள் உறுதி!

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிக்கான அவகாசத்தை, தமிழகம் உட்பட 12 மாநிலங்களுக்கு நீட்டித்து, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது
The deadline for the SR work has been extended again – confirmed for 3 days!
The deadline for the SR work has been extended again – confirmed for 3 days!google
1 min read

சிறப்பு தீவிர திருத்தம்

sir days extend தமிழகம் உட்பட 12 மாநிலங்களில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டுள்ளது. முதற்கட்டமாக, வாக்காளர் கணக்கெடுப்பு பணி, மாநிலம் முழுதும் நடந்து வருகிறது. இதற்கான விண்ணப்ப படிவத்தை, வாக்காளர்களுக்கு வினியோகம் செய்வதுடன், அதை பூர்த்தி செய்து திரும்ப பெற,வரும் 4ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது.

3 நாள் அவகாசம்

இந்நிலையில், தமிழகத்தில் மொத்தமுள்ள, 6.41கோடி வாக்காளர்களில், 6.30 கோடி வாக்காளர்களுக்கு மேல், கணக்கெடுப்பு படிவம் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள், திரும்ப பெறப்பட்டு, 'ஆன்லைனில்' பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அரசியல் கட்சித் தலைவர்களின் கோரிக்கையை ஏற்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான அவகாசத்தை இன்று ( டிச.,11) வரை நீட்டித்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில், தமிழகம், குஜராத், மபி, சத்தீஸ்கர், உபி மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளில் எஸ்ஐஆர் பணிகளை நீட்டித்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை சமர்ப்பிக்க வரும் 14ம் தேதி என 3 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் டிச,19ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் வட்டாரங்கள் கிசுகிசுப்பு

தொடர்ந்து நாட்கள் நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த முறையே இறுதியாகவும் இதனுடன் எஸ்ஐஆர் பணிகள் நிறைவடைந்து, வரைவு வாக்காளர் பட்டியல் முறையாக டிசம்பர் 19 ல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. தேர்தல் கமிஷன் தொடர்ந்து நாட்களை நீட்டித்து மற்றறைய நாடுகளுக்க ஒத்துழைக்கும் நிலையில், வரைவு பட்டியல் வெளியீடும் தள்ளிப்போகுமா என்று அரிசியல் விமர்சகர்கள் கிசுகிசுத்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in