வந்தேமாதரம் பிண்னனி
மேற்கு வங்க கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜி. 1875ல் வந்தே மாதரம் பாடலை இயற்றினார். இது சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மிகப்பெரிய உத்வேகமாக அமைந்திருந்தது .
தேசிய பாடலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது
இது, நாட்டின் தேசிய பாடலாக, 1950 நவம்பர் 7 ல் அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டது.
குறிப்பாக இந்த பாடல் இயற்றப்பட்டு, 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில், சில மாதங்களுக்கு முன், பார்ஜிப்பின் சிறப்பு விலாதமும் நடந்தது.
மத்திய அரசின் உத்தரவு
இதன் தொடர்ச்சியாக அரசு மற்றும் பள்ளி நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்னதாக வநதே மாதரம் பாடல் கட்டாயம் இசைக்க வேண்டும் கடந்த பிப்ரவரியில் மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது
தேசிய கீதத்துக்கு இணையான ஒப்புதல்
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் டில்லி யில் நேற்று முன்தினம் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது அதில் , வந்தே மாதரம் பாடலுக்கு தேசிய கீதத்துக்கு இணையான அந்தஸ்து வழங்கும் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல்
அதன்படி, தேசிய கீதத்தை பாதுகாக்கும் அதே சட்டத்தின் கீழ், வந்தே மாதரம் பாடலையும் கொண்டு வர, தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் வரும் ஜூலை - ஆகஸ்டில் நடக்கும் பார்லி.,மழைக்கால கூட்டத்தொடரில், இந்த திருத்த மசோதா தாக்கல் செய்யப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பாடலை அவமதித்தால் தண்டனை
இதன்படி, இனி மேல் வந்தே மாதரம் பாடப்படும் போது அதற்கு அவமதிப்பு செய்தாலோ அல்லது இடையூறு விளைவித்தாலோ அது ஜாமினில் வெளியே வர முடியாத குற்றமாகக் கருதப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறை அல்லது அபராதம்
பாடலை அவமதிப்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்றும்
மீண்டும் அதே குற்றத்தை செய்வோருக்கு குறைந்தபட்சம் ஓராண்டு சிறை தண்டனை வழங்க இந்த சட்டத்திருத்தம் வழிவகை செய்கிறது.
============