

கீர்த்தி சுரேஷ் வாழ்க்கை
UNICEF Celebrity Advocate Keerthi Suresh : தமிழ், தெலுங்கு, மலையாளம் என பன்மொழி படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வரும், நிலையில், சமீபத்தில் இவருக்கு திருமணம் முடிந்து, அது சார்ந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வாழ்த்துகளையும் பெற்றார்.
யுனிசெஃப் தூதுவரானார் கீர்த்தி
இந்நிலையில், இவர் இப்போது ‘ரிவால்வர் ரீட்டா’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். சந்துரு இயக்கியுள்ள இப்படம் நவ.28-ல் வெளியாக இருக்கிறது. மேலும், விஜய் தேவரகொண்டாவுடன் ‘தோட்டம்’, மிஷ்கினுடன் ஒரு படம் என தொடர்ந்து பல மொழிகளில் நடித்து வருகிறார்.ஆனால், சினிமாவில் மட்டும் நமக்கு கீர்த்தி குறித்த தகவல் இனி யுனிசெஃப்பில் இருந்து வரும் என்றவாறு ஒரு அப்டேட் வெளிவந்துள்ளது.
கீர்த்தி சுரேஷ் டுவீட்
அதாவது, யுனிசெஃபின் குழந்தைகள் நலனுக்கான தூதராக கீர்த்தி சுரேஷ் நியமிக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து தனது சமூக வலை தளப் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், “இந்தியாவில் குழந்தைகளுக்கான யுனிசெஃப் தூதராக இணைவதில் பெருமைப்படுகிறேன். ஒவ்வொரு குழந்தையும் ஆரோக்கியமாக வளரவும், கற்றுக்கொள்ளவும், கனவு காணவும் தகுதியானது.
சினிமா வட்டாரங்கள், ரசிகர்கள் வாழ்த்து
யுனிசெஃப் அதை நனவாக்க கடந்த 76 ஆண்டுகளாக, உழைத்து வருகிறது. அந்தப் பணியில் ஒரு பகுதி யாக நானும் இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியடை கிறேன்” என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் இக்குழுவில் ஏற்கெனவே இடம் பெற்றுள்ள, அமிதாப் பச்சன், சச்சின் டெண்டுல்கர், பிரியங்கா சோப்ரா, ஆயுஷ்மண் குர்ரானா, கரீனா கபூர் கான் ஆகியோ ருடன் கீர்த்தி சுரேஷும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தூதராக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள இந்த பதிவிற்கு ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.