நக்சல்களுக்கு ஆஃபர் கொடுத்த அமித்ஷா-குறையுமா நக்சலைட்ஸ் எண்ணிக்கை!

உலகளவில் நக்சலைட்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இதனை தடுக்கும் விதமாக அவர்களின் மனநிலை மாற்றி நல்வழி படுத்தும் விதமாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதிரடி ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளார்.
Amit Shah made an offer to Naxals - Will the number of Naxalites decrease
Amit Shah made an offer to Naxals - Will the number of Naxalites decrease
1 min read

நக்சலைட்களை தாண்டி நாட்டின் பாதுகாப்பு

Amit Shah made an offer to Naxals - Will the number of Naxalites decrease இந்தியாவில் மட்டுமல்லாது உலக முழுவதும் நக்சலைட் கும்பல்கள் ஒவ்வாரு நாட்டின் அரசுக்கு எதிராக பல வித தீங்குகளை இழைத்து வருகின்றனர். இதனை தடுப்பதற்கு ஒவ்வொரு நாடுகளும் தங்களால் முடிந்த புது முயற்சிகளை தொடுத்து கொண்டும், மீறும் நக்சல்களை அழித்து கொண்டும் தங்களது நாட்டின் வளர்ச்சியையும், பாதுகாப்பையும் தினந்தோறும் உறுதிப்படுத்தி வருகின்றனர்.

இந்தியாவின் பாதுகாப்பு

இந்நிலையில், ஒவ்வாரு நாட்டிற்கும், இந்நாள் வரை நக்சலைட்கள் அரசுக்கு எதிரான கொள்கைகளை தொடுத்தும், ஆயதம் எடுத்தும் தங்களது கூட்டத்தில் புதியவர்களை இணைத்து நக்சல்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கி வருகின்றனர். இவர்கள் பொதுவாக சைனாவை சேர்ந்த மாவோ சேதாங் எனும் சீனாவின் மக்கள் குடியரசுத் தலைவர் கொள்கைகளை பின்பற்றியவர்வாளாக வளம் வருகின்றனர். இப்படி இருக்கையில் இந்தியாவில் ரெட் கொரிடர் என்று பல்வேறு மாநிலங்களில் நக்சல்கள் வாழ்ந்து வருகின்றனர்.

அமித்ஷாவின் ஆஃபர்

இந்தியாவில் உள்ள நக்சல்களை அழிக்கும் வகையிலும், அவர்கள் புதிதாக உருவாகுவதை தடுக்கும் வகையிலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் நக்சல்களுக்கு ஆஃபரை அள்ளி கொடுத்துள்ளார். அதாவது, நக்சல்கள் ஒழிப்பு நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது என்ற டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா நக்சல்கள் சரண் அடைய விரும்பினால், சண்டை நிறுத்தம் தேவையில்லை என கூறினார்.

சரண் அடைந்தால் மன்னிப்பு

மேலும், நக்சல்கள் ஆயுதங்களை கீழே போட்டால் அவர்கள்மீது ஒரு தோட்டா கூடப் பாயாது என்றும் உறுதியளித்த அவர், நக்சல்கள் சரண் அடைய விரும்பினால் அவர்களுக்குச் சிவப்பு கம்பள வரவேற்பு காத்திருப்பதாகவும் அமித்ஷா தெரிவித்துள்ளார். இவரின் இந்த பேச்சிற்கு பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட பலரும் தங்களது கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in