'இந்தியாவில் பொதுமுடக்கம்' தொடர்பாக வெளியாகும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை ;மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங்

No Lockdown in India : இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பொதுமுடக்கம் தொடர்பாக வெளியாகும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மறுப்பு தெரிவித்துள்ளார்.
Union Minister Hardeep Singh Puri  said information being released regarding lockdown in India completely false news
Union Minister Hardeep Singh Puri said information being released regarding lockdown in India completely false newsgoogle
1 min read

மத்திய அரசு மறுப்பு

Minister Hardeep Singh Puri says No Lockdown in India : தொடர்ந்து நீடித்து வரும் போரால் அடிப்படை எரிவாயு விநியோத்தில் பாதிப்பு ஏற்படுவதால் ,இந்தியாவில் பொது முடக்கம் எனப்படும் லாக் டவுன் ஏற்படும் என் சமூக வலைத்தளங்களில் செய்து பரப்பப்படுவதற்கு மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ர் ஹர்தீப் சிங் பூரி மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது

உலகளாவிய நிலைமை தொடர்ந்து நிலையற்றதாகவே உள்ளது. எனவே, எரிசக்தி, விநியோகச் சங்கிலிகள், அத்தியாவசியப் பொருட்கள் தொடர்பான உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது என்று தெரிவித்தார்

பிரதமர் மோடி தலைமையிலான நமது அரசு, குடிமக்களுக்கு எரிபொருள், எரிசக்தி, பிற அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

சவால்களை சமாளிக்க நாங்கள் முழு அளவில் தயாராக அரசு இருக்கிறது என்றும் இந்த தேவையற்ற வதந்திகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் .

பொது முடக்கம் குறித்த பிரதமரின் நாடாளுமன்ற உரை

முன்னதாக நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி,மேற்காசிய போர் காரணமாக சவாலான இந்த சிக்கலை நீண்ட காலம் நீடிக்கக்கூடும். எனவே நாம், கோவிட் காலத்தை எதிர்கொண்டதுபோல் சவாலான சூழலை எதிர்கொள்ள ஒற்றுமையுடன் தயாராக இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

தன பின்புதான் பொதுமுடக்கம் ஏற்படப்போகிறது என்ற அக்கருத்து வதந்தியாக பரவ தொடங்கியது குறிப்பிடத்தக்கது

எரிபொருள் கையிருப்பு உள்ளது : ஹர்தீப் சிங்

இந்தியாவிடம் 2 மாதங்களுக்குத் தேவையான எரிபொருள் கைவசம் இருப்பதாகவும், எனவே பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு குறித்த அச்சமும் ,தேவையற்ற வதந்திகளையும் நம்ப வேண்டாம் என மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in