ரயில் ஒன் செயலி உபயோகம் : ரயில்வே அதிகாரிகள் அறிவுறுத்தல்!

RailOne App : ரயில்வே சேவைகளை பெறும் செலிகளில் யுடிஎஸ் என்னும் செயலி முடக்கப்பட்டதை தொடர்ந்து, ரயில் ஒன் செயலியை பயன்படுத்துமாறு, ரயில்வே துறை அதிகாரிகள் பொதுமுக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
Use RailOne app as Indian Railways will decommission UTS on Mobile App from March 1 Latest News in Tamil
Use RailOne app as Indian Railways will decommission UTS on Mobile App from March 1 Latest News in TamilSource : RailOne
1 min read

யுடிஎஸ் செயலி தொடக்கம் மற்றும் முடக்கம்

RailOne App : இந்​தி​யா​வில் ரயில் சேவை​களை பெறு​வதற்கு பல்​வேறு செயலிகள் பயன்​பாட்​டில் உள்​ளன. இவற்​றில் யுடிஎஸ் செயலி (UTS- Unreserved Ticketing System) முக்​கிய​மானதாகும். இது 2014-ம் ஆண்டு டிசம்​பரில் அறி​முகம் செய்​யப்​பட்​டது. நடைமேடை டிக்​கெட், சீசன் டிக்​கெட், முன்​ப​தி​வில்​லாத டிக்​கெட்​டு​களை இந்த செயலி​யில் பதிவு செய்து கொள்​ளலாம். இந்​நிலை​யில், யுடிஎஸ் செயலி மார்ச் 1-ம் தேதி முதல் நிறுத்​தப்​படு​வ​தாக ரயில்வே நிர்​வாகம் அறி​வித்​துள்​ளது.

புதிய பயனர் பதிவு முடக்கம்

அதே நேரத்​தில், ரயில் ஒன் (RailOne) செயலியை பயன்​படுத்த அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது ஆரம்​பக் கட்​டத்​தில், யுடிஎஸ் செயலி​யில் சீசன் டிக்​கெட் முன்​ப​திவு, புதுப்​பித்​தல் மற்​றும் புதிய பயனர் பதிவு ஆகியவை முடக்​கப்​பட்​டன. இதைத் தொடர்ந்​து, நடைமேடை டிக்​கெட் பதிவு மற்​றும் ஆர்​-​வாலட், டாப்​-அப் செயல்​பாடு​களும் முடக்​கப்​பட்​டுள்​ளன. யுடிஎஸ் செயலி​யின் சமீபத்​திய பதிப்​பைப் பதி​விறக்​கும் அல்​லது புதுப்​பிக்​கும் பயனர்​கள், அந்​தச் செயலி மூலம் நடைமேடை டிக்​கெட்​டு​களை முன்​ப​திவு செய்​யவோ ஆர்​-​வாலட்-ஐ ரீசார்ஜ் செய்​யவோ அனு​ம​திக்​கப்பட மாட்​டார்​கள்.

ரயில்ஒன் செயலிலை பயன்படுத்த அதிகாரிகள் அறிவுறுத்தல்

யுடிஎஸ் செயலி​யில் உள்ள பயனர்​களின் தற்​போதைய ஆர்​-​வாலட் இருப்பு முற்​றி​லும் பாது​காப்​பாக இருக்​கும். யுடிஎஸ் செயலி நிறுத்​தப்​படு​வ​தால், அதில் உள்ள ஆர்​-​வாலட் இருப்பு காலா​வ​தி​யா​காது. அந்த இருப்பு ‘ரயில்​ஒன்’ செயலி​யில் பயன்​படுத்​தக் கிடைக்​கும். டிக்​கெட் பதிவு மற்​றும் பயணி​கள் சேவை​களுக்​காக அதி​காரப்​பூர்வ மொபைல் தளமாக இருக்​கும் ‘ரயில்​ஒன்’ செயலியைப் பதி​விறக்​கம் செய்து பயன்​படுத்த பயணி​கள் அறி​வுறுத்​தப்​படு​கிறார்​கள். முன்​ப​திவு இல்​லாத, சீசன் மற்​றும் நடைமேடை டிக்​கெட்​டு​களு​டன் டிக்​கெட் சேவை​களை ‘ரயில்​ஒன்’ செயலி வழங்​கு​கிறது என்று ரயில்​வே அதி​காரி​கள்​ தெரி​வித்​துள்​ளனர்​.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in