

நக்சல் பாதிப்பில் இருந்து மீண்ட சத்தீஸ்கர் :
சத்தீஸ்கர் மாநிலத்தின் பல பகுதிகள் பல தசாப்தங்களாக இடதுசாரி தீவிரவாதம் (நக்சலிசம்) காரணமாக பாதிக்கப்பட்டிருந்தன.
ஆனால் தற்போது அந்த மாநிலம் நக்சல் அச்சுறுத்தலில் இருந்து மீண்டு வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் வளமை நோக்கிய புதிய பாதையில் பயணித்து வருவதாக துணைக் குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
வளர்ச்சிக்கு தடையாக இருந்த வன்முறை :
தொலைதூர மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் நீண்ட காலமாக பயமும் வன்முறையும் நிலவியதால் சாலைகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற அடிப்படை வசதிகளை உருவாக்குவதில் சிரமங்கள் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இதனால் அப்பகுதிகளின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது என்றும் கூறினார்
மாற்றத்தை உருவாக்கிய அரசின் நடவடிக்கைகள் :
வலுவான அரசியல் மனஉறுதி, உறுதியான பாதுகாப்புக் கொள்கை மற்றும் வளர்ச்சியை மையமாகக் கொண்ட நிர்வாகத்தின் மூலம் பல ஆண்டுகளாக நீடித்த நக்சல் அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்த மாற்றம் நல்லாட்சியும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் இணைந்தால் எத்தகைய பலனை தர முடியும் என்பதற்கான சிறந்த உதாரணம் என்றும் அவர் கூறினார்.
ராய்ப்பூரில் உள்ள AIIMS மருத்துவ நிறுவனம், பயம் மற்றும் பின்தங்கிய நிலையிலிருந்து அமைதி, முன்னேற்றம் மற்றும் வாய்ப்புகள் நிறைந்த புதிய சத்தீஸ்கரின் அடையாளமாக திகழ்கிறது என துணைக் குடியரசுத் தலைவர் பாராட்டினார்.
இந்த நிறுவனம் மாநிலத்தின் மருத்துவ சேவைகள் மற்றும் கல்வி வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
முதலீடுகள் மற்றும் வாய்ப்புகள் அதிகரிப்பு :
ஒருகாலத்தில் வன்முறையால் அறியப்பட்ட பகுதிகள் தற்போது சாலைகள், இணைப்பு வசதிகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவ சேவைகள் மற்றும் புதிய முதலீட்டு வாய்ப்புகளால் அடையாளம் காணப்படுகின்றன.
இது சத்தீஸ்கர் மாநிலத்தின் வளர்ச்சி பயணத்தில் முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
==============